நெருக்கடி நேரத்தில் கைக்கொடுப்பேன்... ஷாருக்கிற்கு சல்மான் நேரில் ஆறுதல்
மும்பை : சொகுசு கப்பலில் போதை பார்ட்டி கொடுத்த விவகாரத்தில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே ஷாருக்கானின் நெருங்கிய நண்பர் சல்மான் கான் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் பார்ட்டி
உல்லாச கப்பலில் போதை பொருள் பார்ட்டியில் பங்கேற்ற விவகாரத்தில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரை போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்றைய தினம் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஷாருக்கான் மன உளைச்சல்
இந்த விவகாரத்தால் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கான் உள்ளிட்ட குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளனர். நேற்றைய தினம் போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஷாருக்கானை காண முடிந்தது. அவருக்கு நேற்றைய தினம் மிகுந்த நெருக்கடியான தினமாக அமைந்திருந்தது.

ஷாருக்கிற்கு சல்மான் ஆறுதல்
இதனிடையே பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் ஷாருக்கின் நெருங்கிய நண்பருமான சல்மான் கான், மன்னாட்டில் உள்ள ஷாருக்கின் இல்லத்திற்கு நேற்றிரவு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அங்கேயே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இருந்து அடுத்தக்கட்ட நடிவடிக்கைகள் குறித்து அவர் ஷாருக்குடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கடுமையான நேரத்தில் கைகொடுப்பேன்
மேலும் ஷாருக்கின் இந்த கடுமையான நேரத்தில் அவருக்கு கைக்கொடுப்பேன் என்று சல்மான் தெரிவித்துள்ளார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் சல்மான் இல்லத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











