சரியான கம்பேக்.. சுஷ்மிதா சென்னுக்கு சல்மான் கான் பாராட்டு.. ரசிகர்களை கவரும் ‘ஆர்யா’ வெப்சீரிஸ்!
மும்பை: சுஷ்மிதா சென் நடிப்பில் கடந்த ஜூன் 19ம் தேதி வெளியான 'ஆர்யா' வெப்சீரிஸை பார்த்த நடிகர் சல்மான் கான் பாராட்டியுள்ளார்.
1994ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற நடிகை சுஷ்மிதா சென், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு சினிமா வாழ்க்கைக்கு குட்பை சொல்லி, குடும்பத்துடன் செட்டில் ஆகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் வெப்சீரிஸ் மூலம் கம்பேக் ஆகி இருக்கிறார்.
தனது குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் சென்று போராடும் 'ஆர்யா' எனும் கதாபாத்திரத்தில் நடிகை சுஷ்மிதா சென் சூப்பராக நடித்துள்ளார்.
சமீபத்தில் ஆர்யா வெப்சீரிஸை பார்த்த நடிகர் சல்மான் கான், சரியான கம்பேக் என்றும், உங்க நடிப்புத் திறமை கொஞ்சமும் மாறவில்லை என பாராட்டி உள்ளார்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 19ம் தேதி வெளியான ஆர்யா வெப்சீரிஸுக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மேலும், பல படங்களிலும், இதுபோன்ற வெப்சீரிஸ்களிலும் தொடர்ந்து நடிகை சுஷ்மிதா சென் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.
சமீபத்தில், ஒரு அவுட்ஸைடராக இருந்து பாலிவுட்டில் தான் எப்படி சாதித்தேன் என்றும், சினிமா கனவுகளுடன் வரும் பல இளைஞர்களை, சிலர் எப்படி தவறாக வழி நடத்துகின்றனர் என்பது குறித்தும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











