Salman Khan: சல்மான் கானை இந்த தேதியில் போட்டுத் தள்ளிடுவேன்.. கொலை மிரட்டல் விடுத்த ராக்கி பாய்!

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கானுக்கு புதிதாக மீண்டும் ஒரு கொலை மிரட்டலை நேற்று இரவு ராக்கி பாய் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மர்ம நபர் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சல்மான் கான் பல நடிகைகளுடன் டேட்டிங் செய்துள்ளார். ஆனால், இன்னமும் எந்தவொரு பெண்ணையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

மேலும், ஏகப்பட்ட வழக்குகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை அவருக்கு தொடர் கொலை மிரட்டல்கள் குவிந்து வருகிறது.

Salman Khan receives fresh death threat from Rocky Bhai shocks Bollywood

ட்ரெய்லர் ரிலீஸ் சமயத்தில்: அஜித், தமன்னா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய வீரம் படத்தின் இந்தி ரீமேக் படமான கிஸி கா பாய் கிஸி கா ஜான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நேற்று இரவு நடைபெற்றது. அந்த நேரம் பார்த்து கட்டுப்பாட்டு அறைக்கு நடிகர் சல்மான் கானை கொலை செய்யப்போவதாக மிரட்டல் போன் கால் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், 2 கோடி மதிப்பிலான புல்லட் ப்ரூஃப் காரை நிஸான் நிறுவனத்திடம் இருந்து நடிகர் சல்மான் கான் வாங்கி உள்ளார். மேலும், தனது பாதுகாப்பை பல மடங்கு இதன் காரணமாகவே அதிகரித்துள்ளார்.

Salman Khan receives fresh death threat from Rocky Bhai shocks Bollywood

நாள் குறித்த ராக்கி பாய்: கேஜிஎஃப் படத்தில் இடம்பெற்ற ராக்கி பாயின் கதாபாத்திர பெயரை மர்ம நபர் நடிகர் சல்மான் கானுக்கு விடுக்கும் கொலை மிரட்டலுக்கு பயன்படுத்தி வருகிறாரா? என்கிற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

நேற்று இரவு திடீரென வந்த கொலை மிரட்டல் போன் காலில் வரும் ஏப்ரல் 30ம் தேதி சல்மான் கானை கொன்று விடுவேன் எனக் கூறி பாலிவுட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். சல்மான் கான் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள வீரம் இந்தி ரீமேக் திரைப்படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

Salman Khan receives fresh death threat from Rocky Bhai shocks Bollywood

பதற்றத்தில் சல்மான் கான்: இந்நிலையில், அந்த படம் வெளியான அடுத்த 9 நாட்களில் சல்மான் கானை போட்டுத் தள்ளிவிடுவேன் என ராக்கி பாய் என்கிற பெயரில் உலாவும் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் நிலையில், நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது உறவினர்கள் பெரும் பதற்றத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏப்ரல் 10ம் தேதி நள்ளிரவு 9 மணிக்கு மிரட்டல் போன் கால் வந்த நிலையில், அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X