அதையெல்லாம் பண்ணாதீங்க.. அது ரொம்ப வேதனையானது.. ரசிகர்களுக்கு பிரபல ஹீரோ சல்மான் கான் கோரிக்கை!
மும்பை: பிரபல பாலிவுட் ஹீரோ சல்மான் கான், அமைதி காக்கும்படி தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென தற்கொலை செய்துகொண்டார்.
இது பாலிவுட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

தொடர்ந்து விசாரணை
அவர் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் அவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வாரிசு நடிகர், நடிகைகள்
சுஷாந்தின் இந்த தற்கொலை, இந்தி சினிமாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திறமையான நடிகர்களை மட்டம் தட்டி, வாரிசு நடிகர், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இவர்களால் மற்றவர்களுக்கான வாய்ப்பு பறிபோகிறது என்பது உள்ளிட்ட பிரச்னைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்து வருகின்றன.

கரண் ஜோஹர்
வாரிசு நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்களுக்கே சென்று சரமாரியாக விளாசினர். இதனால் நடிகை சோனாக்ஷி சின்ஹா ட்விட்டர் கணக்கை மூடிவிட்டார். கரண் ஜோஹர், சோனம் கபூர், ஆலியா பட், நடிகர் சல்மான் கான் ஆகியோர் மீதும் இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள், இவர்களை விளாசி வந்தனர்.

காரசாரமாக
இதற்கு நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். சுஷாந்த் ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தனர். இதனால் சமூக வலைத்தளப்பக்கத்தில், ரசிகர்களுக்கு இடையே வார்த்தை போர் காரசாரமாக நடந்து வருகிறது. இதனால் நடிகர் சல்மான் கான், தனது ரசிகர்களை அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதரவாக இருங்கள்
அவர் இதுபற்றி ட்விட்டரில், எனது ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை. சுஷாந்த் ரசிகர்களுக்கு ஆதரவாக இருங்கள். அவர்களது வார்த்தைகளையும் சாபங்களையும் கருத்தில் கொள்ளாமல், அதன் பின்னால் இருக்கும் உணர்வைக் கவனியுங்கள். சுஷாந்தின் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு துணையாக செயல்படுங்கள். நமது அன்புக்குரியவரின் இழப்பு கடுமையான வேதனையை கொண்டது' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











