சல்மான் தயாரித்து நடிக்கும் ஆன்டிம் படம்... மிரட்டலான ட்ரெயிலர் வெளியானது
மும்பை : பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் நடித்து தயாரிக்கும் படம் ஆன்டிம்.
படத்தில் போலீஸ் அதிகாரியாக சல்மான் கான் நடித்துள்ளார். ஆயுஷ் சர்மா கேங்ஸ்டராக நடித்துள்ளார்.
அடுத்த மாதம் 26ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் மிரட்டலான ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஆன்டிம் படம்
பாலிவுட்டில் சிறப்பான ஹீரோவாக உள்ளார் நடிகர் சல்மான் கான். இவர் சல்மான் கான் ப்லிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஆன்டிம் தி ஃனைல் ட்ரூத் படம்.

வரவேற்பை பெற்ற போஸ்டர்
இந்தப் படத்தின் முதல் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியையொட்டி சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டிருந்தார். போஸ்டரில் சல்மான் மற்றும் அவரது மைத்துனர் ஆயுஷ் சர்மா இடம்பெற்றிருந்தனர்.

காவல் அதிகாரியாக சல்மான்
படத்தில் காவல் அதிகாரியாக சல்மான் கான் நடித்துள்ளார். ஆயுஷ் சர்மா கேங்ஸ்டராக நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையிலான மோதலை படம் சொல்கிறது. இந்த முதல் போஸ்டரில் இது தெரிகிறது. படத் மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கேங்ஸ்டராக ஆயுஷ் சர்மா
இதில் கேங்ஸ்டராக ஆயுஷ் சர்மா மிரட்டியுள்ளார். சல்மானுக்கு இணையான ரோல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய உடலை சல்மானுக்கு இணையாக கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் ஆயுஷ். படத்தில் இவருக்கு அழகான காதல் கதையும் உள்ளது. இந்தப் படம் அடுத்தமாதம் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெயிலர் ரிலீஸ்
படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மிகவும் மிரட்டலான வகையில் ரசிகர்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான ட்ரெயிலர்
கடந்த 2018ல் மராத்தியில் வெளியான முல்ஷி பேட்டர்ன் என்ற கதையை மையமாக வைத்து தற்போது ஆன்டிம் படம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான படத்தின் டீசரும் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் சல்மான் ஒரு சீக்கிய காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சல்மான் மற்றும் ஆயுஷ் இடையிலான காட்சிகள் ட்ரெயிலரில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்ப்பில் ஆன்டிம் படம்
முன்னதாக சல்மான் நடித்து வெளியான தபாங் 3 படம் அவருக்கு சிறப்பாக அமைந்திருந்தது. படத்தில் சோனாக்ஷி சின்ஹா, நடிகர் சுதீப் மற்றும் மகேஷ் மஞ்ச்ரேகரின் மகள் சாயீ ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் அடுத்தமாதம் வெளியாகவுள்ள ஆன்டிம் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











