KisiKa Bhai KisiKi Jaan : வீரம் ரீமேக்கை கோரமாக்கிய சல்மான்.. ஆனால், வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை : சல்மான் கான் நடித்த வீரம் ரீமேக்கான கிசி கா பாய் கிஸி கி ஜான் படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் வெங்கடேஷ் டக்குபதி, பூஜா ஹெக்டே, பூமிகா சாவ்லா, அபிமன்யு சிங், ராகவ் ஜூயல், ஜாஸ்ஸி கில், சித்தார்த் நிகம், ஷெஹ்னாஸ் கில் மற்றும் பாலக் திவாரி ஆகியோர் நடித்துள்ளனர்.
சல்மான் கான் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தை ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கி உள்ளார்.

வீரம் : 2014ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் வீரம். ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கியது. இப்படம் இந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியானது.
கதறிய ரசிகர்கள் : வீரம் படத்தின் இந்தி ரீமேக் என்பதால், இந்தியில் இப்படத்தில் என்னென்ன மாற்றம் செய்து இருக்கிறார்கள், படம் எப்படி இருக்கும் என்று ஆர்வத்தோட பார்த்தவர்களுக்கு தலையே சுற்றிவிட்டதாம், டேய் என்னடா பண்ணி வைச்சி இருக்கீங்க என்று படம் பார்த்த அனைவரும் கதற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை காட்சியைப் பார்த்து, இதை மட்டும் அஜித் பார்த்தா எப்படி பீல் பண்ணுவாரு என்று படத்திற்கு தமிழ் ஆடியன்ஸ் மோசமான கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

வசூல் நிலவரம் : சால்மான் நடிப்பில் தபாங் திரைப்படத்திற்கு பிறகு சில வருடங்களாக எந்த படமும் வெளியாகாததால், கிசி கா பாய் கிஸி கி ஜான் படத்தை திரையில் கொண்டாடினார்கள். பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் முதல் 13 கோடி ரூபாய் வசூலித்தது. இரண்டாம் நாளில் ரூ 26.25 கோடியும், மூன்றாம் நாளில் ரூ 26.25 கோடியும் வசூல் செய்தது.
100 கோடி கிளப்பில் : சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இப்படத்தின் வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. நான்காம் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதில், ரூ.74.75 கோடியை வசூலித்துள்ளது, பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ.100 கோடியை விரைவில் தாண்டும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் ஆடியன்ஸ் இப்படத்தை கழுவி ஊற்றி வரும் நிலையில், விரைவில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











