பரட்டை தலை.. நீண்ட தாடி மீசை.. அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாலிவுட் தாதா.. லீக்கான டைகர் 3 கெட்டப்!

மும்பை: நடிகர் சல்மான் கானின் டைகர் 3 படத்தின் கெட்டப் இணையத்தில் கசிந்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், ஓவியர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டுள்ளார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார் சல்மான் கான்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். சினிமா குடும்பத்தை சேர்ந்த சல்மான் கானை ரசிகர்கள் பாலிவுட் தாதா என்று அழைத்து வருகின்றனர்.

மான் வேட்டை - 5 ஆண்டுகள் சிறை

மான் வேட்டை - 5 ஆண்டுகள் சிறை

இந்திய சினிமாவில் அதிக கமர்ஷியல் ஹிட்டுகளை கொடுத்த நடிகர் என்ற பெருமை பெற்ற சல்மான் கான் பல்வேறு சர்ச்சைகளிலும் வழக்குகளிலும் சிக்கியுள்ளார். மானை வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் சல்மான் கான்.

பெயிலில் வெளிவந்துள்ள சல்மான் கான்

பெயிலில் வெளிவந்துள்ள சல்மான் கான்

ஆனால் தற்போது பெயிலில் வெளி வந்துள்ளார். இதுதொடர்பான மேல் முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது. சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சியிலும் மிரட்டி வருகிறார் சல்மான் கான். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த கான் நடிகர்.

சுஷாந்த சிங் மரணம் - சல்மான் மீது குற்றச்சாட்டு

சுஷாந்த சிங் மரணம் - சல்மான் மீது குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு பாலிவுட் சினிமாவின் இளம் நடிகரான சுஷாந்து சிங் ராஜ்புத் மரணமடைந்த போது கூட சல்மான் கானின் பெயர் அடிபட்டது. இளம் வாரிசு நடிகர் தொடர்பான விவகாரத்தில் சல்மான் கான், சுஷாந்த் சிங்கை மிரட்டியதாகவும் அவருக்கான பட வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

டைகர் 3 படத்தில் சல்மான் கான்

டைகர் 3 படத்தில் சல்மான் கான்

இருப்பினும் தன்னுடைய வேலையில் கவனமாக உள்ளார் நடிகர் சல்மான் கான். தற்போது Antim: The Final Truth மற்றும் லால் சிங் ச்சதா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சல்மான் கான். இந்நிலையில் சல்மான் கானின் டைகர் 3 படத்தின் போட்டோக்கள் இணையத்தில் லீக்காகி உள்ளது.

ரஷ்யாவில் தெருக்களில் நடைபெற்ற சேஸிங்

ரஷ்யாவில் தெருக்களில் நடைபெற்ற சேஸிங்

டைகர் 3 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடில் பங்கேற்றுள்ளார் சல்மான் கான். இந்நிலையில் ரஷ்யாவில் தெருக்களில் நடைபெற்ற சேஸிங் காட்சியில் சல்மான் கான் பங்கேற்றிருந்த போது அதனை ரசிகர் ஒருவர் போட்டோ எடுத்துள்ளார்.

பழுப்பு நிற முடி மற்றும் தாடியுடன்

பழுப்பு நிற முடி மற்றும் தாடியுடன்

அதில் பழுப்பு நிற முடி மற்றும் தாடியுடன், சல்மான் கான் அடையாளம் தெரியாத தோற்றத்தில் இருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சல்மான் கானும் கேத்ரீனா கைஃப்பும் மும்பை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டப் போது கேமராக்களின் கண்களில் சிக்கினர். அந்த போட்டோக்கள் வைரலானது,

சல்மான் கானின் மருமகன் பங்கேற்பு

சல்மான் கானின் மருமகன் பங்கேற்பு

தற்போது, டைகர் 3 படப்பிடிப்பு செட்டில் இருந்து சல்மான் கானின் படங்கள் ரஷ்யாவிலிருந்து வெளிவந்துள்ளன. அந்த போட்டோக்களில் நடிகர் சல்மான் கான் பழுப்பு தாடி முடியுடன் உள்ளார். மேலும் அந்த போட்டோவில் சல்மான் கானின் மருமகன் நிரவன் கான் அவருக்கு அருகில் நிற்பது தெரிகிறது.

வெளிநாடுகளில் படப்பிடிப்பு

வெளிநாடுகளில் படப்பிடிப்பு

இந்த படத்தில் இயக்குநர் மணீஷ் சர்மாவுடன் சல்மான் கானின் மருமகன் நிர்வான் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார். டைகர் 3 படத்தை யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ரஷ்யாவைத் தவிர, டைகர் 3 படம் துருக்கி மற்றும் ஆஸ்திரியாவிலும் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் மணீஷும் ஆதித்யா சோப்ராவும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை பார்த்திராத அதிரடி காட்சிகள்

இதுவரை பார்த்திராத அதிரடி காட்சிகள்

இதனாலேயே படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் டைகர் 3 படத்தில் இதுவரை பார்த்திராத சில அதிரடி காட்சிகளும் இடம் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைகர் 3 படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X