அம்பானி மகன் ப்ரீ வெட்டிங்கில் சல்மானுக்கு நேர்ந்த சோகம்.. இப்படி பேக்கிரவுண்ட் டான்ஸராக மாறிட்டாரே!

மும்பை: பணம் பத்தும் செய்யும் என்பதற்கு அம்பானி மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி மிகப்பெரிய சான்றாக மாறியுள்ளது. ஒரு பக்கம் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டு பணிப்பெண்ணை குரூப் போட்டோ எடுப்பதற்காக தள்ளி நிற்க சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்னொருபுறம் நடிகர் ராம்சரண் இட்லி வடை என ஷாருக்கான் அழைத்தது ராம்சரண் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

Salman Khan turns background dancer at Anant Ambani Pre Wedding shocks fans

இந்நிலையில், சல்மான்கானை பேக்கிரவுண்ட் டான்சராக மாற்றிவிட்டனர் என அவரது ரசிகர்கள் கொந்தளித்து உள்ளனர். இன்னும் என்னென்ன பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும் அந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டுவரும் என்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங்: ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழா இரண்டு நாட்கள் கோலாகலமாக மும்பையில் உள்ள ஜாம் நகரில் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பல அந்த விழாவில் கலந்து கொண்டனர். வெளிநாட்டு தொழில் அதிபர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த் முதல் ராம்சரண் வரை: கோலிவுட்டிலிருந்து ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொண்டார். அதைப்போல டோலிவுட்டில் இருந்து நடிகர் ராம்சரண் தனது மனைவி உபாசனா உடன் பங்கேற்றார். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான், அக்ஷய் குமார், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ராம் சரணுக்கு அவமரியாதை: ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்து வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலின் இந்தி வெர்ஷனுக்கு ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் நடனமாடினர். அப்போது ராம் சரணடையும் அழைக்கலாம் என நினைத்த ஷாருக்கான் இட்லிவடை ராம் சரண் மேடைக்கு வந்து ஆடவும் என பேசியது பெரும் சர்ச்சையை வெடித்துள்ளது. ராம் சரணுக்கு ஷாருக்கான் மரியாதை கொடுக்கவில்லை என்றும் தென்னிந்தியர்களை இட்லி வடை சாம்பார் என்றுதான் பாலிவுட்டில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் என விளாசி வருகின்றனர்.

பேக்கிரவுண்ட் டான்சர்: இனிமேல் நடிகர் சல்மான்கான் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சன்ட் நடனமாடும் போது பேக்கிரவுண்ட் டான்ஸராக பின்னாடி நிற்க வைக்கப்பட்டு நடனம் ஆடிய சல்மான்கான் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான்கான் உடன் இருவரும் சேர்ந்து ஆடினால் கூட பரவாயில்லை, அவரை பின்னாடி நிற்க வைத்து ஆட வைத்தது ஏன் என்கிற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் பணம் இருந்தால் சல்மான்கான் நம்ம வீட்டு விசேஷத்திலும் பேக்கிரவுண்ட் டான்சராக ஆடுவார் என ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

கோடிக்கணக்கில் பணம்: அம்பானி மகன் திருமணத்துக்கு பாலிவுட் பிரபலங்களை விருந்தினர்களாக அம்பானி அழைக்கவில்லை என்றும் ரிஹானாவை 53 கோடி சம்பளத்துக்கு அழைத்தது போலத்தான் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து அழைத்திருக்கிறார் என்றும் அதனால் தான் இவர்கள் ஸ்டேஜ் ஏறி நடனமாடி ஷோ காட்டியுள்ளனர் என ஏகப்பட்ட சர்ச்சைகளும் விவாதங்களும் சோஷியல் மீடியாவில் வெடித்துள்ளன. ரஜினிகாந்த் மற்றும் ராம் சரண் உள்ளிட்டோர் விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X