கண்டுகொள்ளாமல் இருக்காதீர்கள்.. சல்மான் கான் தங்கையின் கணவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள்
மும்பை: ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் என அழைக்கப்படுபவர் சல்மான் கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் அவர் இப்போதும் எனர்ஜி குறையாமல் திரையில் வருவதை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்கின்றனர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சிக்கந்தர் திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது அவரின் ரசிகர்களுக்கு பெர்ய ஷாக்கை கொடுத்திருக்கிறது.
ஹிந்தியில் முதல் படத்தில் நடித்து கடந்த 1988ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான சல்மான் கான் 90களில் மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அவருக்கு போட்டியாக ஷாருக் கான், கிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் சமகாலத்தில் இருந்தாலும் அதில் இப்போதுவரை நிலைத்திருக்கும் சல்மான் கானுக்கு இன்றுவரை பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது எனர்ஜியையும், ஸ்டைலையும் பார்க்கும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் செய்துகொள்ளாத சல்மான் கான்: சல்மானுக்கு இப்போது 57 வயது ஆகிறது. ஆனால் இன்றுவரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. இருப்பினும் ஐஸ்வர்யா ராயை காதலித்துவந்தார். அந்தக் காதல் பிரிவில் முடிந்தது. அந்த பிரேக்கப்புக்கு சல்மான் கானே காரணம்; டாக்சிக்காக ஐஸ்வர்யாவிடம் அவர் நடந்துகொண்டார் என்றும் ஒரு தகவல் பல வருடங்களாகவே உண்டு. அந்த காதல் பிரேக்கப்புக்கு பிறகு பலருடன் இணைத்து சல்மான் கான் பேசப்பட்டாலும் அவருக்கு பெண்கள் மத்தியில் இன்னமும் ஒரு க்ர்ஷ் இருக்கிறது.
சல்மான் கான் லேட்டஸ்ட் படம்: சல்மான் கானுக்கு கடந்த சில வருடங்களாகவே ஹிட் படங்கள் எதுவும் இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த சிக்கந்தர் படத்தை ரொம்பவே அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. படத்தின் மேக்கிங், திரைக்கதை என எதிலுமே புதிதாக இல்லை; அரைத்த மாவையே அரைத்து வைத்திருக்கிறார்கள் என்று ரசிகர்கள் அப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.

சல்மான் கானின் சகோதரி: சல்மான் கானுக்கு அர்பிதா என்ற சகோதரி இருக்கிறார். சகோதரி மீது அதீத பாசம் உடையவர் சல்மான் கான். அர்பிதா நடிகர் ஆயுஷ் ஷர்மாவை காதலித்தார். அந்தக் காதலுக்கு சல்மானும் பச்சை கொடி காண்பிக்க இரண்டு பேருக்கும் திருமணம் நடந்தது. ஆயுஷ் ஷர்மா இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அவரும் பெரிய நடிகராக ஒரு ரவுண்டு வருவார் பாலிவுட்டில் ஆரூடமும் கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை: இந்நிலையில் ஆயுஷ் ஷர்மாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகவே முதுகு வலியால் அவதிப்பட்ட வந்த அவருக்கு தற்போது இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிற்து. மருத்துவமனையில் நலமோடு ஓய்வு எடுத்துவருகிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சிக்ஸ் பேக் வைத்திருப்பது மட்டும் ஆரோக்கியம் இல்லை. உடலுக்குள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
புரிந்துகொண்டேன்: அதைத்தான் நான் இப்போது புரிந்துகொண்டிருக்கிறேன். உடலில் எங்காவது வலி வந்தால் உடனடியாக அதை சரி செய்வதற்கான வழியை பார்க்க வேண்டும். அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம்.பெட் ரெஸ்ட்டில் இருக்கிறேன். எனது மனைவி அர்பிதா நான் வெக்கேஷனில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்கிறார்" என்று பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











