மாட்டிக்கினாரு ஒருத்தரு.. அமீர்கான் மற்றும் சல்மான் கானிடம் வசமாக சிக்கிய ஏ.ஆர். முருகதாஸ்.. ஏன்?
மும்பை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் மற்றும் சத்யராஜ் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் வரும் மார்ச் 30ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்று யூட்யூப் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் உள்ளது.
சிக்கந்தர் படத்துக்கு கடைசியாக வெளியான புரமோஷன் எல்லாமே ரசிகர்களை அந்த படத்தை பார்க்க வைக்க தூண்டி வருகிறது. டிக்கெட் புக்கிங் இந்தி பெல்ட் மற்றும் வெளிநாடுகளில் மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த படம் சல்மான் கானுக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படக் குழு தொடர்ந்து பெரிய அளவிலான புரமோஷன்களை செய்து வருகிறது.

நடிகர்கள் அமீர்கான் மற்றும் சல்மான் கான் அமர்ந்துக் கொண்டு இயக்குநர் முருகதாஸிடம் கேள்வி கேட்கும் படியான கலந்துரையாடல் வீடியோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. அதன் ப்ரோமோ தற்போது வெளியான நிலையில், அதனைப் பார்த்த சந்தோஷ் நாராயணன் 'மாட்டிக்கினாரு ஒருத்தரு' என கமெண்ட் போட்டுள்ளார்.
பாலிவுட்டை கலக்கும் கோலிவுட்: தென்னிந்திய படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் நிலையில், ஏகப்பட்ட கோலிவுட் இயக்குநர்களை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பெரிய நடிகர்கள் படங்களில் நடித்து வருகின்றனர். அமீர் கானை வைத்து கஜினி படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கியுள்ளார். ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை அட்லீ இயக்கியிருந்தார். புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் ரித்திக் ரோஷன் நடித்திருந்தார். மேலும், பல தமிழ் படங்கள் பாலிவுட்டில் வரிசையாக ரீமேக் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரம்ஜானுக்கு சிக்கந்தர்: ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற தமிழ் சினிமா நடிகர்கள் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு படங்களை வெளியிட்டு வருவதைப் போல பாலிவுட் நடிகரான சல்மான் கான் பலமுறை தனது படங்களை ரம்ஜானுக்கு வெளியிட்டுள்ளார். வரும் மார்ச் 30 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அவர் நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
அமீர்கான் கேட்ட கேள்வி: அமீர்கானை வைத்து ஏற்கனவே கஜினி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை இந்தியில் ருசித்தவர் தான் ஏ.ஆர். முருகதாஸ். சிக்கந்தர் படத்தின் புரமோஷனுக்காக அமீர்கான் மற்றும் சல்மான் கான் இணைந்து ஏ.ஆர். முருகதாஸை சுத்துப் போட்டு பேசும் பேட்டி விரைவில் வெளியாக உள்ளது. அதனை முன்னிட்டு வெளியான புரமோவை சல்மான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில், முருகதாஸிடம் யாரு உண்மையான சிக்கந்தர் நானா இல்லை சல்மான் கானா? என அமீர்கான் கொக்கிப் போட்டு கேள்விக் கேட்க என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஏ.ஆர். முருகதாச் முழிப்பது போல வீடியோ உள்ளது.
மாட்டிக்கினாரு ஒருத்தர்: முருகதாசை பார்த்து அமீர் கான் அப்படி ஒரு கேள்வியை கேட்ட நிலையில் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. அதை பார்த்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் "மாட்டிக்கினாரு ஒருத்தர்" என கமென்ட் போட்டுள்ளார். மெட்ரோ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் "வாழ்த்துகள் சார்" என பதிவிட்டுள்ளார். சிக்கந்தர் படத்தில் அமீர்கான் கேமியோவாக நடிக்கிறாரா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.


Click it and Unblock the Notifications











