சட்னி செய்ய போய் சட்டுன்னு இப்படியாயிடுச்சே.. பிரபல நடிகை காயம், எலும்பு முறிவு..திடீர் ஆபரேஷன்!

By

மும்பை: சட்னி செய்து கொண்டிருந்த பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆமிர்கான் நடித்து சூப்பர் ஹிட்டான படம், தங்கல். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இதில் சாக்‌ஷி தன்வார், பாத்திமா சனா சேக், ஸாய்ரா வாசிம் ஆகியோருடன் நடித்திருந்தவர் சான்யா மல்ஹோத்ரா.

நிதேஷ் திவாரி இயக்கி இருந்த இந்தப் படத்தை அடுத்து விஷால் பரத்வாஜின் படாக்கா, பதாய் ஹோ உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

சகுந்தலாதேவி

சகுந்தலாதேவி

இப்போது அனுராக் பாஸுவின் லுடோ, வித்யா பாலனுடன் சகுந்தலாதேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்கள் லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. லாக்டவுன் காரணமாக நடிகர், நடிகைகள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர். இதனால் சமையல், எக்சர்சைஸ், நடனம் என தங்களது நேரத்தைச் செலவழித்து வருகின்றனர்.

எதிர்பாராமல் சிக்கியது

எதிர்பாராமல் சிக்கியது

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால், நடிகை சான்யா, சாப்பிடுவதற்கு சட்னி செய்யும் முயற்சியில் இருந்தார். அப்போது வேகமாகச் சுற்றிக் கொண்டிருந்த ஜாரில் அவர் கை விரல் எதிர்பாராமல் சிக்கியது. இதில் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதிகமாக ரத்தம் வெளியானதால், அவர் மயக்க நிலைக்குச் சென்றார்.

மருத்துவமனை

மருத்துவமனை

வீட்டில் யாரும் இல்லாததால் உடனடியாக நண்பருக்கு போன் செய்தார். அவர் விரைந்து வந்து துணியால் விரல்களைக் கட்டிவிட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு கோவிட் 19 சோதனைக்குப் பிறகு, அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் இரண்டு விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதையும் மேலும் சில விரல்களில் காயம் இருப்பதையும் கண்டனர்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இதையடுத்து அவருக்கு கைவிரல்களில் உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது காயம் காரணமாக, டெல்லியில் இருக்கும் தனது பெற்றோருடன் வசிக்க அவர் முடிவு செய்துள்ளார். இந்த காயம் சில நாட்களுக்கு முன் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சமூக வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகைகள் யாமி கவுதம் உட்பட பலர் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X