கேரளா டு மாலத்தீவு... நீச்சல் குளத்தில் பிகினியில் திணறடிக்கும் சாரா... ரசிகர்கள் கிர்ர்ர்ர்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சாரா அலிகான் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான். இவரது முதல் மனைவி நடிகை அமிர்தா சிங். இவர்களது மகள் சாரா அலிகான். இவரும் இப்போது ஹீரோயினாக நடித்துவருகிறார்.
2018ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக சாரா அலிகான் அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்தார்.
தற்போது இரண்டு படங்களில் நடித்துவருகிறார் சாரா.

ஹாட் பிகினி
பாலிவுட்டின் இளம் நடிகையான இவர் அடிக்கடி ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.

ஏராளமான லைக்ஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய சாரா அலி கான், அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளினார். அந்த புகைப்படங்கள் வைரலாயின.

கேரளாவில்...
இந்நிலையில், கிறிஸ்துமஸை கேரளாவில் கொண்டாடிய அவர், புத்தாண்டை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். அங்கு தனது சகோதரர் இப்ராஹிம் மற்றும் அம்மாவுடன் சென்றுள்ள அவர், நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரேக் பாஸ்ட்
அதில் நீச்சல் குளத்திலேயே காலை உணவு, தட்டில் மிதக்கிறது. அருகில் அவர் ஜாலியாக ஐஸ் கிரீம் தின்றபடி புன்னகைக்கிறார். இரண்டு மூன்று படங்களை பதிவிட்டுள்ளார் அவர். அந்தப் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











