எம்மதமும் சம்மதம்.. கோயில், தேவாலயம் மற்றும் மசூதியில் வழிபாடு நடத்திய நடிகை சாரா அலி கான்!

மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகையும் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளுமான சாரா அலி கான் எம்மதமும் சம்மதம் என அனைத்து மத கோயில்களிலும் வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.

தனுஷின் அட்ரங்கி ரே எனும் இந்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சாரா அலி கான் தற்போது காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

உலகிலேயே சொர்க்கம் என்றால் அது காஷ்மீர் தான் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சைஃப் அலி கான் மகள்

சைஃப் அலி கான் மகள்

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங்குக்கு மகளாக பிறந்தவர் சாரா அலி கான். அப்பா இஸ்லாமியர் அம்மா இந்து என்பதால் அடிக்கடி இந்துக் கோயில்களில் வழிபாடு நடத்தி சர்ச்சையில் சிக்கி வந்தார் சாரா அலி கான்.

சுஷாந்த் படத்தில்

சுஷாந்த் படத்தில்

கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கேதார்நாத் படத்தில் நடித்து பாலிவுட்டில் இளம் நடிகையாக அறிமுகமானார் சாரா அலி கான். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தனுசுக்கு ஜோடி

தனுசுக்கு ஜோடி

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள அட்ரங்கி ரே படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து உள்ளார் சாரா அலி கான். மாயா துபே மற்றும் சகாரிகா ஷர்மா என இரு கதாபாத்திரங்களில் அட்ரங்கி ரே படத்தில் நடித்துள்ள சாரா அலி கான் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

சொர்க்கம் காஷ்மீர்

சொர்க்கம் காஷ்மீர்

உலகிலேயே இது போன்ற ஒரு சொர்க்கத்தை நான் பார்த்ததே இல்லை என காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சாரா அலி கான் அங்குள்ள வழிபாடு தலங்களில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.

எம்மதமும் சம்மதம்

எம்மதமும் சம்மதம்

காஷ்மீரில் உள்ள இந்து கோயில், தேவாலயம், மசூதி மற்றும் குருத்வாரா உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி உள்ள நடிகை சாரா அலி கான் எம்மதமும் சம்மதம் என்கிற நிலைபாட்டை வலியுறுத்தி உள்ளார்.

மனிதம் தான் முக்கியம்

மனிதம் தான் முக்கியம்

அனைத்து மதங்களும் மனிதர்களை நல்வழிப்படுத்தவே உருவானவை என்றும் மனிதர்கள் மதங்களை தவறாக புரிந்து கொண்டு அதனை வைத்து சண்டைப் போட்டுக் கொண்டு இருப்பதாக ஏகப்பட்ட பிரபலங்கள் சொன்னதை போலவே இவரும் மதம் முக்கியமல்ல மனிதம் தான் முக்கியம் என்பதை இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் உணர்த்தி உள்ளார்.

மெரா பாரத் மகான்

மெரா பாரத் மகான்

அனைத்து மத கோயில்களிலும் வழிபாடு நடத்திய புகைப்பட்ங்களை வெளியிட்ட நடிகை சாரா அலி கான் #MeraBharatMahan எனும் ஹாஷ்டேக்கை பதிவிட்டு இந்தியாவில் உள்ள வேற்றுமையில் ஒற்றுமை என்பதையும் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X