அப்போ அது கூலி பட கெட்டப் இல்லையா?.. சத்யராஜ் இப்போ யாருக்கு வில்லன் தெரியுமா?.. மீண்டும் பாலிவுட்!

மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தில் சத்யராஜ் இணைந்துள்ள நிலையில், சமீபத்தில் அவரது வித்தியாசமான கெட்டப் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. அதைப் பார்த்த ரசிகர்கள் 'கூலி' படத்துக்கான கெட்டப்பா இது என்கிற கேள்வியை எழுப்பினர். இந்நிலையில் தற்போது சல்மான்கான் படத்திலும் சத்யராஜ் இணைந்திருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து தீபிகா படுகோன் அப்பாவாக சத்யராஜ் நடித்திருப்பார். அதன் பின்னர் தற்போது சல்மான்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Sathyaraj Salman Khan Coolie

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்தில் சத்யராஜ் இணைந்துள்ளார். இந்த படத்தில் சல்மான்கானுக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்கிறாரா என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

பிரபாஸ் முதல் சல்மான்கான் வரை: தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜ் வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக பிரபாஸுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்திருந்தார். டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் சத்யராஜ் அடுத்ததாக சல்மான்கான் படத்திலும் நடிக்க உள்ளார்.

ரஜினிக்கு வில்லன்: மிஸ்டர் பாரத் படத்திற்கு பிறகு பலமுறை ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதை தவிர்த்து வந்த சத்யராஜ் இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். ஒரே நேரத்தில் ரஜினிகாந்த் மற்றும் சல்மான்கானுடன் இணைந்து பயணிக்கப் போகிறார் சத்யராஜ்.

Sathyaraj Salman Khan Coolie

சல்மான்கானுக்கு வில்லன்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியானது. அந்தப் படத்தில் சல்மான்கானுக்கு வில்லனாக சத்யராஜ் தான் நடிக்கப் போகிறார் என்றும் சமீபத்தில் டிரெண்டான சத்யராஜின் புகைப்படம் சல்மான்கான் படத்திற்கான லுக்காக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

வெப்பன் ஓடவில்லை: வசந்த் ரவியின் வெப்பன் படத்தில் சூப்பர் பவர் கொண்ட ஹீரோவாக சத்யராஜ் நடித்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான அந்த படம் ரசிகர்களை பெரிதாக திருப்திப்படுத்தாத நிலையில், சரியாக ஓடவில்லை. கடந்த ஆண்டு நயன்தாராவுடன் இணைந்து அன்னபூரணி படத்தில் நடித்த சத்யராஜ் இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்து சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்திருந்தார்.

Sathyaraj Salman Khan Coolie

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X