சட்டையைக் கழட்டி சுற்றும் தாதா.. கங்குலியின் பயோபிக் படம் ரெடி.. தாதாவாக யார் நடிக்கிறார் தெரியுமா?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படத்தின் சட்டையைக் கழட்டி தாதா கங்குலி சுற்றும் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தோனி பயோபிக், சச்சின் டாக்குமெண்டரி என இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஸ்போர்ட்ஸ் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனின் வாழ்க்கைப் படமாக 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படம், கிரிக்கெட்டை வெறும் ஒரு விளையாட்டாக மட்டும் அணுகாமல், அதன் போக்கையே மாற்றியமைத்த ஒரு மாபெரும் ஆளுமையின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது.

அசாத்திய திறமை கொண்ட இளம் வீரராகத் தொடங்கி, இந்திய கிரிக்கெட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் எழுச்சியை இப்படம் பதிவு செய்கிறது. இந்திய கிரிக்கெட்டை மறுவரையறை செய்த அவரது அசைக்க முடியாத தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றுடன், ஒரு தலைமுறையையே ஊக்கப்படுத்திய அவரது வாழ்நாள் சாதனைகளையும் இப்படம் கொண்டாடுகிறது.
கங்குலி பர்த்டே ட்ரீட்: சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்திரைப்படத்தில் சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். மேலும், இத்திரைப்படம் 2027 மே 14 அன்று வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கங்குலியாக ராஜ்குமார் ராவ்: தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் இறுதிப் போட்டி வெற்றிக்குப் பிறகு, புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியைக் கழற்றி சுழற்றி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த மறக்க முடியாத தருணத்தை, ராஜ்குமார் ராவ் தனது நடிப்புத் திறனால் அப்படியே மறுஉருவாக்கம் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அச்சமற்ற ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகக் கருதப்படும் அந்த வரலாற்றுத் தருணம், கங்குலியின் ஆக்ரோஷமான தலைமைப் பண்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளமாக இன்றளவும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளது.
விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ள 'தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி' திரைப்படத்தை லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரித்துள்ளனர். குல்ஷன் குமார், பூஷண் குமார், டி-சீரிஸ் மற்றும் DBL இணைந்து வழங்கும் இத்திரைப்படம் லவ் பிலிம்ஸ் (Luv Films) தயாரிப்பாக உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications