அவெஞ்சர்ஸ் நடிகைக்கு விபூதி அடித்த ஏஐ?.. அதிரடியாக வழக்கு தொடர்ந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்.. என்ன ஆச்சு?

லாஸ் ஏஞ்சல்ஸ்: AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து வருகிறது. இதை கண்டு பிடித்ததும் பயன்படுத்தி வருவதும் மனிதர்கள் தான். மனிதர்களுக்கு எதிராக இது பல இடங்களில் மனித குலத்துக்கு சிக்கலாகவும் மாறும் சூழல் உருவாகும் என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

எந்தவொரு டெக்னாலஜி கண்டுபிடிக்கப்படும் போதும் அதன் சாதக பாதகங்கள் நிறைந்தே காணப்படும். ஸ்மார்ட் போன் மூலமாக வெளிநாட்டில் உள்ள கணவரையோ சொந்த பந்தத்தையோ நண்பர்களையோ இங்கே இருந்தே காணும் வசதி உள்ளது.

Scarlett Johansson says OpenAI s ChatGPT voice is similar to her

அதே நேரத்தில் சிறுவர்கள் கூட ஆபாச படங்களை யாருக்கும் தெரியாமல் ஸ்மார்ட் போனில் பார்த்து பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கு காரணமாகவும் அதிக நேரம் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி குழந்தைகள் நேரத்தை விரையமாக்குவதை தாண்டி மனவளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகளும் அரங்கேறத்தான் செய்கின்றன.

ராஷ்மிகா அலறல்: சினிமாவில் உள்ளாடையுடன் ரன்பீர் கபூரை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவே தனது முகம் வேறு ஒரு கவர்ச்சி இன்ஃப்ளூயன்ஸியருடைய உருவத்துடன் எடிட் செய்யப்பட்டதை பார்த்து ஷாக் ஆனார். அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். ஏஐ வளர்ச்சியால் நிறைய டீப் ஃபேக் வீடியோக்கள் வலம் வரத் தொடங்கி விட்டன. நடிகைகளின் நிர்வாண வீடியோக்கள் போன்று பல ஆபாச மார்ஃப்ட் வீடியோக்களும் உலா வரத் தொடங்கியுள்ளன.

Scarlett Johansson says OpenAI s ChatGPT voice is similar to her

ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கே விபூதி: மார்வெல் திரைப்படங்களில் பிளாக் விடோ எனும் கதாபாத்திரத்தில் அவெஞ்சர் ஆக நடித்து உலகளவில் பிரபலமானவர் ஸ்கார்லெட் ஜோஹன்சன். லூசி படத்தில் இவரே 100 சதவீத மூளையை பயன்படுத்தி கடவுளாக மாறி எங்கேயும் நிறைந்து விடுவது போன்ற கதை உருவாக்கப்பட்டு இருக்கும். அப்பேர்பட்ட ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கே Open AI நிறுவனம் விபூதி அடித்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

என்ன பிரச்சனை?: ஓபன் ஏஐ நிறுவனத்தை சேர்ந்த சாம் ஆல்ட்மேன் Chat GPT 4.0 சிஸ்டத்துக்காக ஒரு அழகான பெண் குரலை தேர்வு செய்ய வேண்டும் என நினைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்சனிடம் டீல் பேசியுள்ளனர். ஆனால், அதற்கு நடிகை சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் வெளியான சாட் ஜிபிடி 4.0 சிஸ்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள குரல் அச்சு அசல் ஸ்கார்லெட் ஜோஹான்சன் குரலாகவே உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரத்தை அறிந்த நடிகை இது தொடர்பாக தற்போது வழக்கு ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Scarlett Johansson says OpenAI s ChatGPT voice is similar to her

எல்லாமே ஆபத்து: கடந்த சில தினங்களுக்கு முன் சாம் அல்ட்மேன் என்னுடைய டீமை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை வைத்தார். அதில், எனக்கு உடன்பாடு இல்லாத நிலையில், அவசர அவசரமாக வழக்கறிஞர் ஒருவரை நான் நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. சமீப காலமாக டீப் ஃபேக் உள்ளிட்ட பல சித்திரவதைகளை அனுபவித்து வருகி்றோம். தனிமனித உரிமையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம் என ஸ்கார்லெட் ஜோஹான்சன் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் தற்போது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X