பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகள்.. பல லட்சம் பேர் இரங்கல்.. இர்ஃபானுக்கு ரசிகர்கள் ராயல் சல்யூட்
சென்னை: பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் மறைவு செய்தி அறிந்த லட்சக்கணக்கான திரைத்துறை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அந்த சிறந்த நடிகரின் மறைவுக்கு சமூக வலைதளத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேக்குகளை உருவாக்கி பாலிவுட் முதல் கோலிவுட் ரசிகர்கள் வரை இணையத்தையே இர்ஃபான் கானின் இரங்கல் தளமாக மாற்றி ராயல் சல்யூட் வைத்து வருகின்றனர்.

ஹாஷ்டேக்குகள்
இர்ஃபான் கான் மரண செய்தி தேசத்தையே உலுக்கிப் போட்டு இருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் கண்ணீர் மல்க ரசிகர்கள் நடிகர் இர்ஃபானுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். #IrrfanKhan, #RestInPeace #RIPIrfan, #Legend, #AngreziMedium, "Paan Singh Tomar", #GoneTooSoon, #lunchbox, #RIPIrrfanSir என எக்கச்சக்க ஹாஷ்டேக்குகளை போட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பொய்யாக இருக்கக் கூடாதா
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இயற்கை எய்தினார் என்ற செய்தி வந்த உடனே பலரும் அது பொய்யான செய்தி என்றே கருதினார்கள். ஒன்றுக்கு பல முறை உறுதி செய்யப்பட்ட பின்னரே பல செய்தி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டனர். இந்நிலையில், இர்ஃபான் இறப்பு செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா? என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

நான்கே நாட்களில்
95 வயதான இர்ஃபான் கானின் தாயார் சாயீதா பேகம் கடந்த சனிக்கிழமை அன்று தான் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். தாய் இறந்த துக்கத்தில் இருந்த நடிகர் இர்ஃபான் கான் நான்கே நாட்களில் உயிரிழந்த செய்தி பாலிவுட் ரசிகர்களையும் இர்ஃபான் கான் ரசிகர்களையும் ரொம்பவே பாதித்திருக்கிறது.

அரிய புகைப்படம்
இர்ஃபான் கான் குழந்தை பருவத்தில் இருக்கும் அரிய புகைப்படத்தை பகிர்ந்து, அவரது இழப்பு இந்திய சினிமாவில் ஈடு செய்ய முடியாத ஒன்று என இந்த பிரபலம் பதிவிட்டுள்ளார். அவர் எப்போதுமே குறும்பாகவும், கனிவாகவும் பிறரிடம் பழகக் கூடிய நல் இதயம் கொண்டவர், இவ்வளவு சீக்கிரமாக பிரிந்து செல்வார் என நினைக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

நம்முடனே இருப்பார்
கலைஞன் மறைந்தாலும், அந்த கலைஞன் அவனது கலை படைப்பால் என்றுமே மறைய மாட்டான். அது போலவே நடிகர் இர்ஃபான் கானின் எண்ணற்ற உலகத் தரம் வாய்ந்த சினிமா படைப்புகள் திரையுலகம் இருக்கும் வரை நீடித்து இருக்கும். அவர் நம்முடனே எப்போதும் இருப்பார் என இந்த ரசிகர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











