25 டைட்டில்களை நிராகரித்து தேர்வு.. அட்லி -ஷாருக் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான்

மும்பை : நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ல் ஜீரோ படம் வெளியானது. அதை தொடர்ந்து பல பிரச்சினைகளில் அவர் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லயன் என்ற தலைப்பே இந்தப் படத்தின் தலைப்பு என்று கூறப்பட்டது.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான் கடந்த 2018ல் ஜீரோ என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தன்னுடைய மகன் ஆர்யன் பிரச்சினை, கொரோனா சூழல் உள்ளிட்டவை காரணமாக அவர் அடுத்த படத்தில் நடிக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் அவர் இணைந்துள்ளார்.

அடுத்தடுத்த பிரச்சினைகள்

அடுத்தடுத்த பிரச்சினைகள்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போதுதான் தன்னுடைய மகன் ஆர்யன் பிரச்சினையில் ஷாருக் மனவேதனையுடன் இருந்தார். அந்தப் பிரச்சினையில் இருந்து தற்போது ஷாருக் மீண்டுள்ள நிலையில் தற்போது அட்லி -ஷாருக் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஷாருக்கிற்கு ஜோடி நயன்தாரா

ஷாருக்கிற்கு ஜோடி நயன்தாரா

இந்தப் படத்தில் நயன்தாரா ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார். முன்னதாக இவர் அட்லியின் இயக்கத்தில் ராஜா ராணி மற்றும் பிகில் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது 3வது முறையாக அட்லியுடன் இணைந்துள்ளார். இந்தப் படம்மூலம் அவர் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

டைட்டில் வெளியீடு

டைட்டில் வெளியீடு

இந்நிலையில் இந்தப் படத்தின் டைட்டிலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக படத்தின் டைட்டில் லயன் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது. 25 டைட்டில்களில் இருந்து இந்த டைட்டிலை ஷாருக் மற்றும் அட்லி தேர்ந்தெடுத்துள்ளனர்.

விரைவில் டீசர்

விரைவில் டீசர்

இதனிடையே படத்தின் டீசர் தற்போது தயாராகியுள்ளதாகவும் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகிவரும் ஷாருக்கானின் இந்தப் படத்தின் டீசரை பார்க்க அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

2 கதாபாத்திரங்களில் ஷாருக்கான்

2 கதாபாத்திரங்களில் ஷாருக்கான்

இந்தப் படத்தில் ஷாருக் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கதைப்படி ஹீரோவும் அவரே, வில்லனும் அவரே என்று படக்குழு தெரிவித்துள்ளது. அவர் கேங்ஸ் மற்றும் ரா அமைப்பின் அதிகாரியாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம். நயன்தாரா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம்.

 அனிருத் இசை

அனிருத் இசை

படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில், படத்தின் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. படத்தில் யோகி பாபுவும் சிறப்பான கேரக்டரில் நடித்து வருகிறார்.

 ட்ரெண்டிங்கில் அட்லி

ட்ரெண்டிங்கில் அட்லி

இதனிடையே ஷாருக்கின் ஜவான் படத்தின் டைட்டில் வெளியானதை தொடர்ந்து, ட்விட்டரில் இயக்குநர் அட்லி ட்ரெண்டிங்கிலேயே இருந்தார். தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள், அதில் வெளியான வண்ணம் இருந்தது. ஷாருக்கானை காட்டிலும் அட்லியையே ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் வைத்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X