ஷாருக்கானுக்கு நடிக்கவே தெரியாது.. அழகாவும் இல்லை.. பாகிஸ்தான் நடிகை பேச்சு.. விளாசும் ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாகிஸ்தான் நடிகை மஹ்னூர் பலோச் (Mahnoor Baloch) இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவான நடிகர் ஷாருக்கான் நல்ல நடிகரே இல்லை என்றும் அவர் அழகாகவும் இல்லை என்று சமீபத்திய பேட்டியில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஷாருக்கான் குறித்து இப்படியொரு விமர்சனத்தை முன் வைத்துள்ள பாகிஸ்தான் நடிகையை பாலிவுட் ரசிகர்கள் பச்சை பச்சையாக திட்டி வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து நடிகர்களும் ஷாருக்கானின் கால் தூசுக்கு சமம் என மஹனூர் பலோச்சுக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Shah Rukh Khan fans blasts Pakistani actress Mahnoor Baloch for her recent controversial talks

ஷாருக்கான் அழகானவர் கிடையாது: 53 வயதாகும் அமெரிக்காவில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்த நடிகை மஹ்னூர் பலோச் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் ஷாருக்கான் பற்றி கேட்ட கேள்விக்கு, "ஷாருக்கான் ஒரு நல்ல மனுஷன் அவருக்கு மிகப்பெரிய aura (ஒளி) உள்ளது.

ஆனால், நடிகர்களுக்குத் தேவையான அழகு என்கிற அளவுகோலில் அவரை எடை நிறுத்திப் பார்த்தால் அவர் ஒன்றும் அவ்வளவு அழகு இல்லை என அந்த நடிகை பேசியுள்ளார்.

நடிக்கவே தெரியாது: மேலும், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஷாருக்கானுக்கு ஒழுங்கா நடிக்கவே தெரியாது. என்னை பொறுத்தவரையில் அவர் ஒரு நல்ல பிசினஸ்மேன். தன்னையும் தனது படத்தையும் எப்படி மார்க்கெட் செய்து உலகளவில் வசூல் சாதனைகளை படைக்க முடியும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.

என் கருத்து அவரது ரசிகர்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால், என் மனதில் பட்டதை தான் சொல்கிறேன் என பாகிஸ்தான் நடிகை பேசியிருப்பது ஷாருக்கான் ரசிகர்களை காண்டாக்கி உள்ளது.

Shah Rukh Khan fans blasts Pakistani actress Mahnoor Baloch for her recent controversial talks

திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்: ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே தொடர்ந்து பாய்காட் ஃபீவரில் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், இந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் தான் 1000 கோடி வசூலை அள்ளி மீண்டும் பாலிவுட்டை இந்திய சினிமாவில் தலைநிமிர வைத்ததே.

ஷாருக்கான் நடிப்பு பற்றியும் ஷாருக்கானின் அழகு குறித்தும் விமர்சிக்க அந்த பாகிஸ்தான் நடிகைக்கு அப்படி என்ன தகுதி இருக்கு, ஷாருக்கான் பற்றி பேசியதால் தான் இந்த நடிகை பெயரே உலகுக்கு தெரியும். ஒட்டுமொத்த பாகிஸ்தான் நடிகர்களும் சேர்ந்து வந்தாலும், ஷாருக்கானுக்கு கால் தூசுக்கு கூட சமமாக மாட்டார்கள் என ஷாருக்கான் ரசிகர்கள் விளாசியும் கெட்ட கெட்ட வார்த்தைகளாலும் அந்த நடிகையை தீட்டித் தீர்த்து வருகின்றனர்.

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் டிரெய்லர் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அடுத்த பிளாக்பஸ்டர் ஹிட்டை ஷாருக்கான் கொடுக்கப் போகிறார், நீ இப்படியே பேசிட்டு சுத்து என அந்த நடிகையை ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X