பதான் படத்திலிருந்து மிரட்டலான போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்: இதுதான் ரியல் மாஸ், குஷியான ரசிகர்கள்
மும்பை: பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது பதான், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Recommended Video
இதில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் பதான் திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார்
பதான் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்
ஷாருக்கான் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை கடந்துவிட்டார். இது அவ்வளவு எளிதானதல்ல, காரணம் ஷாருக்கான் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து திரையுலகில் அறிமுகமானவர். இந்தியாவின் மிகப் பெரிய திரைத்துறையான பாலிவுட்டில், 30 ஆண்டுகளாகவும் பாட்ஷாவாக ஜொலித்து வருகிறார் ஷாருக்கான். 1989ல் 'ஃபாஜி' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் கேமராவின் கண்களில் சிக்கியவர், 1992-ல் வெளியான 'திவானா' படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

சூப்பர் டூப்பட் ஹிட் ஷாருக்கான்
ஷாருக்கானின் படங்கள் பெரும்பாலும் வசூலில் குறைந்தபட்ச சாதனையை நிகழ்த்தி விடும். தில்வாலே துல் ஹனியா லே ஜாயேங்கே, பாஸிகர், பர்தேஸ், குச் குச் ஹோதா ஹை', தில் தோ பாகல் ஹை', தில் சே', மொஹப்பத்தீன்', கபி குஷி கபி கம், கல் ஹோனா ஹோ, மே ஹீ னா', ரப் னே பனாதி ஜோடி, மை நேம் இஸ் கான், ஓம் ஷாந்தி ஓம் என ஷாருக்கானின் படங்கள் மெஹா ஹிட் அடித்துள்ளன.

வெற்றிக்காக காத்திருக்கும் ஷாருக்
ஷாருக்கானின் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம், சிறப்பான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு அவர் நடித்த ஜீரோ, எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதோடு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஷாருக்கானின் படங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது அவர் நடிப்பில் பதான், ஜவான் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில், ஜவான் படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

பதான் மீது நம்பிக்கை
சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வருகிறார். ஆதித்யா சோப்ராவின், யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரமாண்டமான பட்ஜெட்டில் பதான் தயாராகி வருகிறது. இதனிடையே ஷாருக்கான் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சமீபத்தில் பாதன் படத்தில் இருந்து ஷாருக்கானின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்தப் படம் ஷாருக்கானுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான் ஆப்ரஹாமின் போஸ்டர்
யஷ்ராஜ் பிலிம்ஸ் சினிமா தயாரிப்பில் தனது 50வது ஆண்டை தொடங்கவுள்ளதை சிறப்பிக்கும் வகையில், 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி பதான் திரைப்படம் ரிலீசாகிறது. இதனை குறிப்பிட்டு, இப்படத்தில் ஜான் ஆப்ரகாமின் போன்ஸ்டரை ஷாருக்கான் ரிலீஸ் செய்துள்ளார். முன்னதாக இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஜான் ஆப்ரகாம் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதனை உறுதிசெய்யும் விதமாக தற்போது வெளியான ஜான் ஆப்ரஹாமின் போஸ்டரை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











