Shah Rukh Khan First Place- உலகத்திலேயே ஷாருக்கான்தான் முதல் இடம் - எதில் தெரியுமா?..

மும்பை: Shah Rukh Khan (ஷாருக்கான்) உலகத்திலேயே செல்வாக்குமிக்க நபர்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடம் பிடித்திருக்கிறார்.

பாலிவுட் பாஷா என அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருக்கென்று இந்தியா முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் சமீபத்தில் பதான் படத்தில் நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் நடித்திருக்கும் படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Shah Rukh Khan is the most influential person in the world

எதிர்ப்பை சந்தித்த பதான் திரைப்படம்: நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருப்பதால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

Shah Rukh Khan is the most influential person in the world

பதான் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனம்: இந்தச் சூழலில் படத்துக்கு எந்த மாதிரியான விமர்சனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் பதான் படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்தனர். மேலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த பதானில் ஷாருக்கானின் நடிப்பும், ஜான் ஆபிரஹாமின் வில்லத்தனமும் சிறப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர். குறிப்பாக வயது ஏற ஏற ஷாருக்கானுக்கு இளைமையும் கூடுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். உலகம் முழுவதும் அந்தப் படமானது 1000 கோடி ரூபாய் வசூலித்தது.

உலகத்திலேயே ஷாருக்கான்தான் முதலிடம்: இந்நிலையில் உலகத்திலேயே செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். பிரபல பத்திரிகையான டைம் பத்திரிகை வருடா வருடம் தனது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தின் இந்த முடிவுகளை வெளியிடும். அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட பட்டியலில் ஷாருக்கான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். மொத்தம் பதிவான 12 கோடி வாக்குகளில் நான்கு விழுக்காடு வாக்குகளை ஷாருக்கான் பெற்றிருக்கிறார்.

Shah Rukh Khan is the most influential person in the world

அடுத்தடுத்த இடங்களில் யார் தெரியுமா?: ஷாருக்கானுக்கு அடுத்த இடத்தில் அர்ஜெண்டினா கால்பந்து அணி வீரர் லயோனல் மெஸ்ஸி இருக்கிறார். 1.9 விழுக்காடு வாக்குகளுடன் இங்கிலாந்து இளவரசர் ஹேரியும், அவரது மனைவி மேகனும் முறையே மூன்று மற்றும் நான்காவது இடஙக்ளில் இருக்கின்றனர். அதேபோல் இந்தப் பட்டியலில் செரீனா இல்லியம்ஸ், மைக்கேல் யோ, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்டோரும் இருக்கின்றனர். முதலிடம் பிடித்த ஷாருக்கானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X