ஜெயிலுக்கு போக தயங்கமாட்டேன்.. மகளை டேட் செய்ய ஷாருக்கான் போட்டிருக்கும் 7 ரூல்ஸ் தெரியுமா?

மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி உலகத்தின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தியது குறிப்பிடத்தக்கது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. படத்தின் சிங்கிள் பாடல் வெளியானபோது அதில் தீபிகா படுகோன் அணிந்திருந்த உடையின் நிறத்தை வைத்து ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Shah Rukh Khan Old Interview Gone Trending on Social Media

1000 கோடி ரூபாய் வசூல்: ஆனால் பலரும் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

முதல் படம்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.

டன்கி: இப்படி கடந்த வருடம் வரிசையாக ஷாருக்கானுக்கு இரண்டு மெகா ஹிட் படங்கள் அமைந்துவிட்டன. இந்தச் சூழலில்தான் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஷாருக்கான் நடிப்பில் மூன்றாவது படமாக டன்கி வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. மேலும் 470 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க ஷாருக்கானுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஷாருக்கான் மகள்: இதற்கிடையே ஷாருக்கானுக்கு சுஹானா என்ற மகளும், ஆர்யன் கான், அப்ராம் கான் என்ற மகன்களும் இருக்கிறார்கள். இவர்களீல் ஆர்யன் கான் சில வருடங்களுக்கு முன்பு போதை பொருள் விவகாரத்தில் கைது ஆனது குறிப்பிடத்தக்கது. சுஹானா கானை பொறுத்தவரை அவருக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். பிறகு அதுதொடர்பாக வெளிநாட்டுக்கு சென்று படித்துவிட்டு இந்தியா திரும்பினார்.

The Archies: இந்தியா திரும்பிய அவர் ஜோயா அக்தர் இயக்கிய The Archies என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கடந்த வருடம் வெளியான அந்தப் படம் சுஹானாவுக்கு டீசண்ட்டான வரவேற்பையே பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு இன்னும் சில படங்களில் அவர் நடிக்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கண்டிப்பாக தந்தை போலவே பெரிய ஸ்டாராக சுஹானா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானின் ரூல்ஸ்: இந்நிலையில் தனது மகளை யாராவது டேட் செய்தால் அவர்களுக்கு 7 ரூல்ஸ் இருக்கிறது என்று ஷாருக் பேசிய வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "எனது மகளை காதலித்தாலோ அல்லது டேட் செய்தாலோ அந்த நபருக்கு முதலில் வேலை இருக்க வேண்டும். 2. அந்த நபரை எனக்கு பிடிக்காது. 3. நான் எல்லா இடத்திலும் இருப்பேன். 4. சஹானா எனது இளவரசி. 5. அவளுக்கு அவன் என்ன செய்தாலும் அதனை நான் திருப்பி செய்வேன். 6. எனவே அவன் வழக்கறிஞர் வைத்துக்கொள்வது நல்லது. 7. நான் சிறைக்கு செல்ல தயங்கமாட்டேன்"" என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X