Shah Rukh Khan: என்ன பெரிய ஷாருக்கான் சம்பளம்... அவரோட மேனேஜர் பூஜா சம்பளம் என்னன்னு தெரியுமா?

மும்பை: பாலிவுட் திரையுலகின் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் ஷாருக்கான் ஒரு படத்துக்கு பல கோடிகளில் சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில், ஷாருக்கானை நிழல் போல பின் தொடர்பவர் அவரது மேனேஜர் பூஜா தத்லானி.

கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக இருக்கும் பூஜாவின் சம்பளம் குறித்தும், அவரது சொத்து மதிப்பு பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

 Shah Rukh Khans manager Pooja Salary of Rs 10 crore per annum

ஷாருக்கானின் நிழல் - யார் இந்த பூஜா?
பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷாருக்கான். 30 ஆண்டுகள், பல சூப்பர் ஹிட் படங்கள், பாக்ஸ் ஆபிஸ் கிங் என இந்தி திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாய்காட் பிரசாரங்களை கடந்தும் 1000 கோடிக்கு மேல் வசூலித்தது.

பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கவுள்ளார் ஷாருக்கான். மேலும் ஒரு படத்திற்காக 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஷாருக், ஏராளமான விளம்பரங்களில் நடித்தும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். அதேநேரம் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி தலை சுற்ற வைத்துள்ளது.

 Shah Rukh Khans manager Pooja Salary of Rs 10 crore per annum

கடந்த 11 ஆண்டுகளாக ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார் பூஜா தத்லானி. ஷாருக்கானின் நிழலாக பின்தொடரும் பூஜா, கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினராக வாழ்ந்து வருகிறார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நேரத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தது பூஜா தான். மேலும், ஆர்யன் கான் ரிலீஸில் பூஜா தான் முன்னணியில் நின்று பல முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஆர்யன் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கண்கலங்கி நின்றார் பூஜா. அப்போதுதான் அவருக்கும் ஷாருக்கான் குடும்பத்துக்கும் இடையேயான ஆத்மார்த்தமான நெருங்கிய உறவு குறித்து பலருக்கும் தெரிய வந்தது. ஷாருக்கானின் கால்ஷீட், அவர் எங்கு யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் பூஜா தான் கவனித்துக்கொள்கிறாராம். ஷாருக்கான் பிஸியாக இருக்கும் போது மட்டும் இல்லாமல், தொடர் தோல்விகள், படமே ரிலீஸாகாத நேரத்திலும் அவருக்கு பக்கபலமாக நின்றவர் பூஜா.

 Shah Rukh Khans manager Pooja Salary of Rs 10 crore per annum

அதேபோல், ஷாருக்கானின் பயணங்களில் அவருடன் எப்போதும் பயணிப்பதும் பூஜா மட்டும் தானாம். ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகமும் பூஜாவின் கண் அசைவில் தான் நடக்கின்றன. 40 வயதாகும் பூஜா மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளார். கடந்த 2008ல் தொழிலதிபர் ஹிதேஷ் குர்னானி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பூஜாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஷாருக்கானிடம் மேனேஜராக வேலைப் பார்த்து வரும் பூஜா இப்போது ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம்.

மெர்சிடிஸ் கார் உட்பட 50 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார் பூஜா. அதேபோல், ஷாருக்கான் கூப்பிட்டால் உடனே வரவேண்டும் என்பதற்காக பூஜா தனது வீட்டை பாந்த்ரா பகுதிக்கே மாற்றிவிட்டாராம். இதனால் அந்த வீட்டின் இண்டீரியர் வேலைகளை ஷாருக்கானின் மனைவி கெளரி கான் தான் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாருக்கானின் மேனேஜரின் சம்பளம், சொத்து உள்ளிட்ட தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X