போதைப்பொருள் மாஃபியாவுடன் தொடர்பில்லை.. செம சேஃப் ஆன ஷாருக்கான் மகன்.. ஆனால், அந்த பிரச்சனை இருக்கே?

மும்பை: போதைப்பொருள் கும்பலுடன் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கு தொடர்பிருப்பதாக அவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தனது மகன் ஆர்யான் கானை ஜாமினில் எடுக்க நடிகர் ஷாருக்கான் தொடர்ந்து போராடிய நிலையில், ஜாமினில் எடுத்தார்.

மேலும், அந்த வழக்கை விசாரித்து வந்த அதிகாரியும் அதிரடியாக மாற்றப்பட்டார். இந்நிலையில், போதைப்பொருள் கும்பலுக்கும் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என சிறப்பு விசாரணைக் குழு தகவல் அளித்துள்ளது.

ஷாருக்கான் மகன்

ஷாருக்கான் மகன்

நடிகர் ஷாருக்கானின் மகன சொகுசு படகில் போதை பார்ட்டி நடத்தியதாக எழுந்த புகாரில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கானை போதை தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டது இந்தியளவில் மிகப்பெரிய பரபரப்பை கிளப்பியது.

பாலிவுட் பிரச்சனை

பாலிவுட் பிரச்சனை

பாலிவுட் திரையுலகமே போதைப்பொருள் மாஃபியாவிடம் சிக்கித் தவிப்பதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக எழுந்த விசாரணையில் நடிகையும் அவரது முன்னாள் காதலியுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், போதைப்பொருள் கும்பலுடன் ஆர்யான் கானுக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

அதிகாரி மாற்றம்

அதிகாரி மாற்றம்

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கானின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த விசாரணை முறைகேடாக நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த வந்த விசாரணை அதிகாரி சமீர் வாங்கடே அதிரடியாக மாற்றப்பட்டார்.

சிறப்பு விசாரணைக் குழு

சிறப்பு விசாரணைக் குழு

மகாராஷ்ட்ரா அமைச்சர் நவாப் மாலிக் இப்படியொரு குற்றச்சாட்டை முன் வைக்க அதன் காரணமாக சமீர் வாங்கடே மாற்றப்பட்ட நிலையில், இந்த விசாரணையை சிறப்பு விசாரணைக் குழு நடத்தி வந்தது. அதில், தற்போது போதைப்பொருள் கும்பலுக்கும் ஆர்யான் கானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தெளிவாகி இருப்பதாக கூறியுள்ளனர். இந்த வழக்கு இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என்றும் கூறியுள்ளனர்.

அந்த பிரச்சனை இருக்கு

அந்த பிரச்சனை இருக்கு

ஆர்யான் கானின் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றில் நடத்திய சோதனைகளில் அவர் எந்த போதைப்பொருள் கும்பலுடனும் தொடர்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளதாக கூறிய நிலையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் அவர் மீது விசாரணை நடத்தலாமா? என்கிற ரீதியிலும் அதிகாரிகள் இந்த விசாரணையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு சுமூகமாக முடியும் வரையில் ஆர்யான் கானுக்கு பிரச்சனை தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X