கையில் துப்பாக்கி.. மிரட்டும் ஷாருக்கான்.. ‘பதான்‘ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் பதான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக பதான் உருவாகிறது. இந்த படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் 3 படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்
பாலிவுட் பாட்ஷா என்றும், பாலிவுட் கிங், கிங் ஆஃப் ரொமான்ஸ், எஸ்.ஆர்.கே என பலவிதமான பட்டப்பெயருடனை ஷாருக்கானை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகின்றனர். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய ஷாருக்கான், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்.

அறிமுக நடிகருக்கான விருது
1992ல், பாலிவுட்டில், 'டர்' என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஷாருக்கான். மேலும், அதே ஆண்டே அவரின் நடிப்பில் 3 படங்கள் வெளியாகி, பிலிம்பேர் விருதையும், சிறந்த அறிமுக நடிகர் விருதையும் பெற்றார். 'டர்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 30 ஆண்டுகள் ஆவதால் ரசிகர்கள் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.

போஸ்டரே மிரட்டுதே
ஷாருக்கானில் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், பதான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் விலங்குடன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மாஸா போஸ் கொடுத்து இருக்கிறார். இத்திரைப்படம் ஜனவரியில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் 'ஜவான்' உட்படத் தொடர்ச்சியாக படங்கள் வர இருக்கின்றன.

3 மொழிகளில்
இப்படத்தை, மெகா ஹிட்டான வார் திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா சோப்ரா இயக்கி வருகிறார். ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா, தீபிகா படுகோன உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பதான் திரைப்படம் திரைக்கு வரும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில்
கடந்த 2018-ம் ஆண்டு கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் 'ஜீரோ' என்ற படம் வெளியில் வெளியானது. அதன் பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை என்பதால் பதான் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளார். மேலும், மாதவன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள தி ராக்கெட்ரி படத்திலும், அமீர் நடிப்பில் உருவாகி உள்ள லால் சிங் சத்தா திரைப்படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அதில் தி ராக்கெட்ரி திரைப்படம் ஜூலை 1ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











