அந்த கைதுக்கு பிறகு.. இப்போதான் இன்ஸ்டாகிராம் வராரு ஷாருக்கான் மகன்.. என்ன போஸ்ட் தெரியுமா?

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கானின் மகன் அர்யான் கான் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்ட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Recommended Video

கையை பிடித்து இழுத்த நபர்..திரும்பிப் பார்த்து முறைத்த ஷாருக்கான்..

போதைப் பொருள் வழக்கில் கடந்த ஆண்டு அதிரடியாக கைது செய்ய்ப்பட்டார் ஆர்யான் கான்.

ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்யான் கான் அரெஸ்ட்

ஆர்யான் கான் அரெஸ்ட்

பாலிவுட்டின் டாப் ஹீரோ நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி சொகுசு படகில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப் பொருள் வழக்கில் கைதானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அப்பாவின் போராட்டம்

அப்பாவின் போராட்டம்

மகனை ஜாமினில் வெளியே கொண்டு வரவும், மகன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நிரூபிக்க நடிகர் ஷாருக்கான் ஒரு தந்தையாக பெரும் போராட்டத்தையே நடத்தினார். தனது சினிமா பட வேலைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, மகனை வெளியே கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.

குற்றமற்றவர்

குற்றமற்றவர்

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யான் கான் மீது போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவர் குற்றமற்றவர் என போதை தடுப்புப் பிரிவு போலீசார் அறிவித்ததன் பேரில் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஆர்யான் கான். இந்நிலையில், கிட்டத்தட்ட ஓராண்டுக்கு பிறகு சோஷியல் மீடியா பக்கம் வந்துள்ளார்.

சகோதர சகோதரியுடன்

சகோதர சகோதரியுடன்

தனது சகோதரி சுஹானா கான் மற்றும் இளம் சகோதரர் ஆபிரகாம் உடன் ஆர்யான் கான் எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோவை பதிவிட்டு ஹாட்ரிக் என கேப்ஷன் கொடுத்திருந்தார். அந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் போட்டு அவருக்கு சோஷியல் மீடியாவில் வார்ம் வெல்கம் கொடுத்தனர்.

ஷாருக்கான் கமெண்ட்

ஷாருக்கான் கமெண்ட்

இந்த போட்டோவை பார்த்த ஷாருக்கான், இந்த அழகான போட்டோவை எனக்கு ஏன் அனுப்பவில்லை என மகனிடம் கேட்க, அடுத்த முறை போஸ்ட் போடுவதற்கு முன் அனுப்புகிறேன் அப்பா என பதில் போட்டுள்ளதும் ரசிகர்களால் அதிகமாக லைக் செய்யப்பட்டு வருகிறது.

வாரிசு நடிகை

வாரிசு நடிகை

ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடிப்பில் உருவாகி உள்ள The Archies திரைப்படம் அடுத்த மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. ஷாருக்கானின் மகள் சினிமாவில் நுழைய உள்ள நிலையில், அடுத்ததாக ஆர்யான் கானும் சினிமாவுக்கு வருவார் என உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அட்லி படம்

அட்லி படம்

4 ஆண்டுகளாக புதிய படத்தை வெளியிடாமல் இருக்கும் ஷாருக்கான் சமீபத்தில் மாதவனின் ராக்கெட்ரி மற்றும் அமீர்கானின் லால் சிங் சத்தா படங்களில் கேமியோவாக வந்து சென்றார். பதான் படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படமும் அடுத்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X