Shah Rukh Khan Salary: புஷ்பா பட இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்.. ரூ.300 கோடி சம்பளமா?
சென்னை: புஷ்பா மற்றும் ரங்கஸ்தலம் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கானை வைத்து பான் இந்தியா திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.300 கோடி சம்பளம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருந்தால், ஷாருக்கானின் மிகப்பெரிய சம்பளம் இதுவாகும்.
ரங்கஸ்தலம், உப்பேனா, புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அடுத்தடுத்து பல வெற்றிப்படத்தை கொடுத்து வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை அள்ளி இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படத்தில் நடிக்க ரூபாய் 300 கோடிகள் வாங்கியதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தைத்ரி மூவி மேக்கர்ஸ்: இதைத்தொடர்ந்து கோலிவுட் பக்கம் காலடி எடுத்துவைத்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்ற படத்தை தயாரித்தது. அந்த திரைப்படத்தில் அஜித், த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா என பலர் நடித்திருந்தனர். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படத்தில் அஜித்திற்கு ரூ.160 கோடி சம்பளம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக்ரவிச்சந்திரன் இத்திரைப்படத்தி இயக்கி இருந்தார். இப்படம் 20 நாட்களில் ரூ.270 கோடி வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கம் டியூட் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
ரூ.300 கோ சம்பளமா?: கோலிவுட் தனது தடத்தை பாதித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தற்போது பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்காக ஷாருக்கானுக்கு ரூ.300 சம்பளம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய முதல் நடிகராக ஷாருக்கான இருப்பார். இந்தப் படத்தை புஷ்பா பட இயக்குநர் சுகுமார் இயக்க உள்ளார். இவர் இயக்கும் படங்கள் வணிக ரீதீயாக வெற்றி அடையும் என்பதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் ஷாருக்கான் மற்றும் மைத்ரி இடையே இதுவரை எந்த சந்திப்பும் நடக்கவில்லை உன நடிகரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. தற்போது, ஷாருக்கான் அவர் மகள் சுஹானா கான் வைத்து கிங் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். இதனால், கிங் படத்தில் தான் ஷாருக்கானின் முழு கவனம் செலுத்தி வருகிறார். இத்திரைப்படம் வெளியான பிறகு தான் ஷாருக்கான் தனது அடுத்த திரைப்படம் குறித்தும், இயக்குநர் குறித்தும் முடிவு எடுக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











