Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஷாருக்கான்.. அடுத்து சல்மான் கான்.. பாலிவுட்டில் செட்டிலாகும் நயன்தாரா ?
சென்னை : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் நயன்தாரா தான் நம்பர் 1 நடிகையாக இருந்து வருகிறார்.
சாதாரண நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி பிறகு கவர்ச்சிக் கன்னியாக சில ஆண்டுகள் வலம் வந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் சோலோவாக நடிக்க ஆரம்பித்து இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற உயரத்துக்கு சென்று விட்டார்.
விஜய், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிய நடிகையாக மாறிவிட்ட நயன்தாரா இப்போது பாலிவுட்டில் தனது தடத்தை பாதித்துள்ளார்.
நடிகை
மும்தாஜ்
வீட்டில்
கொடுமை
தாங்கல..
100க்கு
போன்
போட்ட
பணிப்பெண்..
என்ன
நடந்தது?

நயன்தாரா
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

திருப்பதியில் திருமணம்
நயன்தாரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார்.

திருமணம்
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருக்கின்றன. ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அவர்களின் திருமண தேதி குறித்த எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சல்மான்கானுடன்
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஷாருக்கானின் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திருமணம் செய்ய உள்ள நயன்தாரா, திருமணம் முடிந்தவுடன் சல்மானின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை கேள்விபட்ட ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தா, நயன்தாரா பாலிவுட்டில் செட்டிலாகி விடுவார் போல என்று கேட்டு வருகின்றனர்.