உதட்டைக் கிழித்தது கிரிக்கெட் பந்து... பிரபல ஹீரோவுக்கு 13 தையல்... மருத்துவமனையில் அனுமதி

By

மொகாலி: கிரிக்கெட் பந்து தாக்கியதில் பிரபல ஹீரோவுக்கு கீழ் உதடு கிழிந்தது. இதனால் அவருக்கு 13 தையல் போடப்பட்டுள்ளது.

பிரபல இந்தி ஹீரோ ஷாகித் கபூர். இவர், 36 சைனா டவுண், ஜப் வி மெட், ஆர்.ராஜ்குமார், ஆக்‌சன் ஜாக்சன், அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான கபிர் சிங் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இப்போது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஜெர்ஸி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண்

ஹரிஷ் கல்யாண்

தெலுங்கு ஜெர்ஸியில் நானி, ஹரிஷ் கல்யாண், ஸ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். இதன் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூருடன் மிருணாள் தாகூர், பங்கஜ் கபூர், ஜாக்கி ஷெராப் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மொகாலி

மொகாலி

கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், இதற்காக பயிற்சி பெற்று வந்தார் ஷாகித். இதன் ஷூட்டிங் மொகாலி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது.

பந்து தாக்கியது

பந்து தாக்கியது

அப்போது வீச்சப்பட்ட பந்து எதிர்பாராதவிதமாக, ஷாகித் கபூரின் உதட்டில் வேகமாக மோதியது. இதையடுத்து உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

13 தையல்

13 தையல்

அங்கு அவர் உதட்டில் 13 தையல் போடப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரம் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் கூறியுள்ளதால், ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

மிரா ராஜ்புத்

மிரா ராஜ்புத்

இதுபற்றி அவர் மனைவி மிரா ராஜ்புத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக மொகாலி சென்றார். அவர் இப்போது கணவர் ஷாகித் கபூரை கவனித்து வருகிறார். உடல் நிலை குணமான பின் ஷூட்டிங் தொடரும் என்று படக்குழு கூறியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X