பாவத்த.. ஷாகித் கபூருக்கே கேர்ள் ஃபிரெண்ட் கிடைக்கலையா?.. என்ன இப்படியொரு முடிவுக்கு வந்துட்டாரு!

மும்பை: கடந்த ஆண்டு விஜய்சேதுபதியுடன் இணைந்து ஷாகித் கபூர் ஃபர்ஸி வெப்சீரிஸில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த பிளடி டாடி படம் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், காதலர் தினத்தை டார்கெட் செய்து புதுவிதமான ரொமான்டிக் படத்தை ரிலீஸ் செய்ய காத்திருக்கிறார். நேற்று அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

2019ம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் ரீமேக் செய்து சந்தீப் ரெட்டி வங்காவை பாலிவுட்டுக்கு கொண்டு வந்தவரே ஷாகித் கபூர் தான். அந்தப் படத்தில் கியாரா அத்வானியை ஏகப்பட்ட தடவை லிப் லாக் அடித்திருந்தார். 400 கோடிக்கும் மேல் அதிக வசூலையும் இந்தியில் வெளியான அந்த படம் ஈட்டி அசத்தியது.

Shahid Kapoor new robot girl friend movie Teri Baaton Mein Aisa Uljha Jiya trailer out now

ராஷி கன்னாவுடன் டாப்லெஸ் காட்சி: கடந்த ஆண்டு ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வெளியான ஃபர்ஸி வெப்சீரிஸில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்திருந்தார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான அந்த வெப் சீரிஸில் ராஷி கன்னாவுடன் படுக்கையறை காட்சிகளலும் லிப் லாக் முத்தக் காட்சிகளிலும் ஷாகித் கபூர் நடித்திருந்தார். அவருக்கு ஒரு கேர்ள் பிரண்ட் கிடைக்கலையா? என பாலிவுட் ரசிகைகள் எல்லாம் பதறும் அளவுக்கு புதிய ட்ரெய்லர் ஒன்று வெளியாகியுள்ளது.

Shahid Kapoor new robot girl friend movie Teri Baaton Mein Aisa Uljha Jiya trailer out now

ஷாகித் கபூர் புதிய படம்: Teri Baaton Mein Aisa Uljha Jiya எனும் படத்தில் ஷாகித் கபூர் மற்றும் க்ரித்தி சனோன் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே க்ரித்தி சனோனை காதலித்து அவருடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ரொமான்ஸ், லிப் லாக் என ஷாகித் கபூர் ஜமாய்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பின்னர் தான் அது பெண்ணே கிடையாது என்றும் அது ஒரு ஹியுமனாய்ட் ரோபோ என்றும் தெரிய வர டிரெய்லர் ரசிகர்களை ஷாக் ஆக்கி விடுகிறது.

Shahid Kapoor new robot girl friend movie Teri Baaton Mein Aisa Uljha Jiya trailer out now

லேடி எந்திரன்: ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ரோபோவாக நடித்திருப்பார். அதேபோல இந்த படத்தில் பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் ரோபோவாக நடித்திருக்கும் காட்சிகள் டிரெய்லரை ரசிக்க வைக்கிறது.

ஹன்சிகா வெப் சீரிஸ்: தமிழில் சமீபத்தில் இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் ஹன்சிகா, முகேன் ராவ், சாந்தனு மற்றும் ஜனனி உள்ளிட்ட பலர் நடித்த MY3 வெப்சீரிசிலும் ஹன்சிகா ரோபோவாக நடித்திருப்பார். இந்நிலையில், பெண் ரோபோவாக க்ரித்தி சனோன் நடித்துள்ள இந்த பாலிவுட் படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. கடந்த ஆண்டு க்ரித்தி சனோன் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் எதிர் பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X