நன்றி சொன்ன ஷாகித் கபூர்.. நடிகர் நானி போட்ட பதிவு
மும்பை : கபீர் கான் திரைப்படத்திற்கு பிறகு ஷாகித் கபூர் நடித்து ரிலீசாகவிருக்கும் படம் ஜெர்சி
தோற்றுப் போன ஒரு கிரிக்கெட் வீரரை பற்றிய உருக்கமான கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் ரிலீசாகி சூப்பர்ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக் ஆகும்.
ஜெர்சி ஹிந்தி படத்தை குறிப்பிட்டு நடிகர் நானி போட்ட பதிவுக்கு நன்றி சொல்லி பதில் பதிவு போட்டிருக்கிறார் ஷாகித் கபூர்.

ஜெர்சி 2019
2019 ஆம் ஆண்டு ஜெர்சி ஒரிஜினல் வெர்ஷன் தெலுங்கு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அனைவரது பாராட்டுகளை பெற்று சூப்பர் ஹிட்டானது. நடிகர் நானி கதாநாயகனாக நடித்த இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் Gowtham Tinnanuri. இந்த படத்தின் வெற்றியால் இதே படத்தை இந்தியில் இயக்க அழைக்கப்பட்டார் இயக்குனர். நடிகர் நானி நடித்த கிரிக்கெட்டர் கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க இந்த படப்பிடிப்பு முடிந்து, பல பிரச்சினைகள் கடந்து படம் இன்று ரிலீசானது. படத்தில் கதாநாயகியாக நடிகை Geetika mehandru நடித்திருக்கிறார். தெலுங்கு படத்தை இயக்கிய அதே இயக்குனர் ஹிந்தி படத்தை இயக்கி இருப்பதால் படத்தின் உயிர் அப்படியே இருக்கிறது என சொல்லப்படுகிறது.

தோற்றுப்போன கிரிக்கெட்டர்
ஜெர்சி திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தோற்றுப்போன ஒரு கிரிக்கெட் வீரரின் கதையை சுருக்கமாக சொல்லும் படமாக வந்துள்ளது. ஒரு காலத்தில் பெரிய கிரிக்கெட் வீரராக வலம் வந்து கொண்டு இருந்த படத்தின் கதாநாயகன் பிற்காலத்தில் எப்படி வீழ்ந்தான், வேலையில்லாமல் மனைவியின் வருமானத்தில் அன்றாட வாழ்க்கையை கழிக்கும் ஒரு குடும்பத் தலைவனாக எப்படி வாழ்கிறான் என்பதை சொல்லும் கதை. தனது மகன் இந்திய அணி அணியும் 500 ரூபாய் மதிப்புள்ள ஜெர்சியை வாங்கித்தர பணமில்லாமல் தவிக்கும் தந்தையின் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ஜெர்சியில் நடிகர் நானி தனது நடிப்பால் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை கண்கலங்க வைத்திருப்பார். அதேபோல ஹிந்தி ரீமேக்கிலும் அது நடந்து இருப்பதாக விமர்சனங்கள் வருகிறது.

நடிகர் நானி பாராட்டு
ஜெஸ்ஸி ஹிந்தி திரைப்படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் பல முக்கிய பிரமுகர்களுக்கு போட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. பலரை விமர்சகர்களிடம் இருந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தைப் பார்த்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் " ஜெர்சி படம் பார்த்தேன் இயக்குனர் மறுபடியும் பந்தை கிரவுண்ட் வெளியே அடித்திருக்கிறார். என்ன ஒரு நடிப்பு. ஷாகித் கபூர், Mrunal, பங்கஜ் கபூர் ட்விட்டர் அக்கவுண்ட் Tag செய்து இது உண்மையான நல்ல சினிமா வாழ்த்துக்கள் " என பதிவிட்டுள்ளார்.

அர்ஜுன் To அர்ஜுன்
ஜெஸ்ஸி திரைப்படத்தில் கதாநாயகனின் பெயர் அர்ஜுன். சிறப்பு காட்சியை பார்த்து நடிகர் நானி அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், படத்தை இயக்கிய இயக்குனரை பாராட்டு போட்ட ரிட்டர் பதிவிற்கு பதிலாக ஷாகித் கபூர் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் " ஒரு அர்ஜுனிடம் இருந்து இன்னொரு அர்ஜுனுக்கு நன்றி. பேரன்புமிக்க நண்பா. மிகப் பெரிய மனது உங்களுக்கு இருக்கிறது. ஜெர்சி திரைப்படம் உருவானதற்கு அந்த மனதே காரணம். மென்மேலும் நீங்கள் பலம் கொள்ள வேண்டும். என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது சாகித் கபூர் தொடர்ந்து 2 தெலுங்கு திரைப்படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











