மனைவியா?.. சினிமாவா?.. எதை முடிவு செய்வீர்கள்?.. ஷாருக்கான் சொன்ன அதிரடி பதில்
மும்பை: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் ஷாருக்கான் கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
ஷாருக்கான் கடந்த வருடம் பதான், ஜவான், டன்கி ஆகிய படங்களில் நடித்திருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய பதான் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நான்கு ஆண்டுகளுக்கு பின்பு ஷாருக்கான் நடித்திருந்ததால் அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உருவாக்கியது. எதிர்ப்புகளுக்கு இடையில் படமானது கடந்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பல எதிர்ப்புகளை சந்தித்தாலும் பதான் படம் 1000 கோடி ரூபாயை வசூலித்து மாஸ் சாதனை படைத்தது.பதான் படத்தின் மாபெரும் வெற்றி ஒட்டுமொத்த பாலிவுட்டையும் ஆச்சரியப்பட வைத்தது. இதனையடுத்து அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்தார் ஷாருக்கான்.

மெகா ஹிட் ஜவான்: அட்லீக்கு அது முதல் ஹிந்தி படம் என்பதால் எப்படிப்பட்ட வசூலை எடுத்து விமர்சனத்தை சந்திக்கப்போகிறது என்ற கேள்வி பலரிடமும் எழுந்திருந்தது. படத்துக்கு தமிழ்நாட்டில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் வட மாநிலங்களில் பலத்த வரவேற்பு கிடைத்தது. படமும் ஆயிரம் கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் ஷாருக்கான், அட்லீ ஆகிய இருவருமே ஹேப்பியில் இருக்கின்றனர்.
அட்லீயுடன் இன்னொரு படம்: ஜவான் படத்தில் அட்லீயின் வொர்க்கிங் ஸ்டைல் ஷாருக்கிற்கு ரொம்பவே பிடித்துவிட்டதாக தெரிகிறது. நிச்சயம் அவருடன் இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற மூடில் ஷாருக்கான் இருப்பதாகவும்; அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம் என்று பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. மேலும் அந்தப் படத்துக்கும் ஜவான் டீமையே இறக்கலாம் என்ற ஐடியாவிலும் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
ஷாருக்கானின் புதிய படம்: ஷாருக்கான் இப்போது தி கிங் படத்தில் நடித்துவருகிறார். இதற்கு முன்பு அவர் நடித்த ஜவான், பதான், டன்கி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்ததால் அதே வைபை இதிலும் தக்க வைக்க வேண்டுமென்று அவர் நினைக்கிறார். இந்தச் சூழலில் ஷாருக்கான் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது.
ஷாருக்கான் பேட்டி: அந்தப் பேட்டியில் அவரிடம் சினிமா இல்லை மனைவி இரண்டில் யார் வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சினிமாவா இல்லை மனைவியா என்று என்னிடம் கேட்டால் நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் எனது மனைவிதான் வேண்டும் என்று கூறுவேன்" என்றார். ஷாருக்கானின் இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அட மனைவி மீது ஷாருக்கான் எவ்வளவு காதல் வைத்திருக்கிறார் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











