ஜெயில் சாப்பாடு வேண்டாம்... வெறும் பிஸ்கட் போதும்… விரக்தியில் ஷாருக்கானின் மகன் !
மும்பை : ஷாருக்கானின் மகன் அர்யா கான் ஜெயிலில் சாப்பாடு சாப்பிடாமல் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.
கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப் பொருள் வழக்கில் மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடுக்கடலில் விருந்து
மும்பையில் நடுக்கடலில் கடந்த 2ந் தேதி நள்ளிரவில் ஒரு கப்பலில் சிறப்பு விருந்துக்கு சிலர் ஏற்பாடு செய்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோடீஸ்வர குடும்பங்களை சேர்ந்தவர்களும், திரையுலக பிரபலங்களும், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் அந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

போதை பொருள்
இதுகுறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தை அடுத்து, போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சாதாரண உடையில் அந்த கப்பலில் பயணம் செய்தனர். மும்பையில் இருந்து கிளம்பிய அந்த கப்பல் கடலுக்குள் பயணித்த போது அங்கு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சிலர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஷாருக்கானின் மகன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். 2ம் கட்டமாக மேலும் சிலரை கைது செய்தனர்.

அக்டோபர் 20ந் தேதி
இதையடுத்து, ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை மும்பை நீதிமன்றம் ஏற்கனவே ஒத்திவைத்திருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்தது. 3வது முறையும் இவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 20ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். ஷாருக்கான் தனது மகனை வெளியில் எடுக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்.

பிஸ்கட்டை
இந்நிலையில், மும்பை ஆர்துர் ரோடு சிறையில் இருக்கும் ஆர்யா கான், ஜெயிலில் தரப்படும் உணவை சாப்பிடாமல் அடம் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. மணி ஆர்டராக அனுப்பிய 4,500 ரூபாய் பணத்தை வைத்துக்கொண்டு கேன்டீனில் இருக்கும் பிஸ்கேட்டை சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. எப்படியும் அப்பா வெளியில் எடுத்துவிடுவார் என்று அவர் நம்பிக்கொண்டு ஜெயில் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

எந்த தொடர்பும் இல்லை
ஆர்யான் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும், அவருக்கும் போதை பொருள் கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆர்யான் தரப்பு தொடர்ந்து வாதிட்டு வருகிறார். ஆனால் போதைப் பொருள் பயன்படுத்தியது, போதைப் பொருள் தயாரித்து, விற்றது அல்லது வாங்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ஆர்யான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











