மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகல.. மருத்துவமனையில் அட்மிட்டான ரஜினிகாந்த் நண்பர்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் 23-ம் தேதி தான் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்காவுக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

1986 ஆம் ஆண்டு வெளியான 'ஆஸ்லி நக்லி' எனும் இந்தி படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சத்ருகன் சின்ஹா இணைந்து நடித்தனர். அந்த படத்திற்கு பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர்.

Shatrughan Sinha Sonakshi Sinha Bollywood

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

சோனாக்ஷி சின்ஹா திருமணம்: சல்மான்கான் நடித்த தபங் படத்தில் நடித்து ஹிந்தி சினிமாவில் அறிமுகமான பிரபல ஹாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது காதலர் ஜாகிர் இக்பால் என்பவரை கடந்த ஜூன் 23-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமியரை அவர் திருமணம் செய்து கொண்ட நிலையில், ஆரம்பத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவின் விருப்பத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கடைசியாக திருமணத்தில் சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றது ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியது.

மருத்துவமனையில் அனுமதி: மகள் திருமணம் முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திடீரென சத்ருவின் சின்ஹா இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 77 வயதாகும் சத்ருகன் சின்ஹா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்ருகன் சின்ஹாவுக்கு என்ன ஆச்சு?: பழம்பெரும் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு கடந்த சில நாட்களாகவே வைரல் ஃபீவர் இருந்து வந்த நிலையில், அவரை மருத்துவமனையில் இன்று அனுமதித்துள்ளோம் என அவரது மகன் லவ் சின்ஹா வட இந்திய மீடியாக்களுக்கு அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். பயப்படும் படி எதுவும் இல்லை என்றும் ஓரிரு நாளில் அப்பா வீட்டுக்கு திரும்பிவிடுவார் என்றும் லவ் சின்ஹா தெரிவித்துள்ளார். புதுமணத் தம்பதிகளான சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் மருத்துவமனைக்கு சென்று சத்ருகன் சின்ஹாவை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை: சத்ருகன் சின்ஹாவுக்கு எதுவும் ஆகாது என்றும் அவர் சீக்கிரமே பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் மகளின் திருமணத்துக்காக அலைந்து திரிந்ததில் உடல் நலம் சரியில்லாமல் போயிருக்கும் என்றும் பாலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X