காதலை வென்ற நட்பு.. மறைந்த பிக் பாஸ் வின்னர் உருவத்தை பச்சைக் குத்திய காதலியின் அண்ணன்!

மும்பை: பிக் பாஸ் சீசன் 13ன் டைட்டில் வின்னரான சித்தார்த் சுக்லா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உருவத்தை நடிகை ஷெனாஸ் கில்லின் சகோதரர் பச்சைக் குத்தி இருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் சீசன் 13ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் சித்தார்த் சுக்லா.

அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நடிகை ஷெனாஸ் கில்லும் அவரும் காதலித்து வந்ததாக ஏகப்பட்ட ரூமர்கள் கிளம்பின.

சித்தார்த் சுக்லா மரணம்

சித்தார்த் சுக்லா மரணம்

பிக் பாஸ் டைட்டிலை வென்ற சித்தார்த் சுக்லாவிற்கு பாலிவுட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் காத்திருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த செப்டம்பர் 2ம் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென அவரது உயிர் பிரிந்தது ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நாடு முழுவதும் இரங்கல்

நாடு முழுவதும் இரங்கல்

பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை நாடு முழுவதும் பிக் பாஸ் டைட்டில் வின்னரான சித்தார்த் சுக்லாவின் மரணத்திற்கு ஏகப்பட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அதே போல பாலிவுட் பிரபலங்கள் பலரும் சித்தார்த் சுக்லாவின் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர்.

உடைந்து போன காதலி

உடைந்து போன காதலி

சித்தார்த் சுக்லாவின் கடைசி நிமிடங்களிலும் ரூமர் காதலி ஷெனாஸ் கில் கூட இருந்தார் என்றும் சித்தார்த் சுக்லாவின் மரணம் அவருக்கு மிகப்பெரும் அதிர்ச்சியாக மாற அவர் அப்படியே உடைந்து போய் விட்டார் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. இறுதி ஊர்வலத்திலும் கலங்கியபடியே ஷெனாஸ் கில் கலந்து கொண்டதை பார்த்த ரசிகர்கள் மன வருத்தம் அடைந்தனர்.

Recommended Video

Shakila Daughter MILLA Quarantined in GRAND CHOLA HOTEL | Bigg Boss 5 Contestant
கையில் டாட்டூ

கையில் டாட்டூ

இந்நிலையில், ஷெனாஸ் கில்லின் சகோதரர் ஷெபாஸ் பாதேஷா தனது கையில் சித்தார்த் சுக்லாவின் உருவத்தை பச்சையாக குத்தி உள்ளார். அந்த புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் அவர் ஷேர் செய்ய சித்னாஸ் ரசிகர்களுக்கு அது மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலை கடந்த நட்பு

காதலை கடந்த நட்பு

நடிகை ஷெனாஸ் கில் கூட சித்தார்த் சுக்லாவின் டாட்டூவை போடாத நிலையில், நல்ல நண்பரான ஷெபாஸ் பாதேஷா சித்தார்த் சுக்லாவின் டாட்டூவை தனது கரத்தில் குத்தியிருப்பதை அறிந்த ரசிகர்கள் காதலை கடந்த நட்பு என்று கொண்டாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் சந்திப்பு

பிக் பாஸ் வீட்டில் சந்திப்பு

பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது பிக் பாஸ் வீட்டுக்கு நடிகை ஷெனாஸ் கில் சார்பாக அவரது சகோதரர் ஷெபாஸ் பாதேஷா தான் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் ஆன நிலையில், நிகழ்ச்சி முடிந்த பின்னரும் குடும்ப நண்பர்களை போலவே இருவரும் பழக ஆரம்பித்தனர். சித்தார்த் சுக்லாவின் மரண செய்தியை அறிந்த ஷெபாஸ் மிகவும் வருத்தத்துடன் போட்ட சமூக வலைதள பதிவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

என்றுமே என்னுடன்

என்றுமே என்னுடன்

மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் டாட்டூவை தனது கையில் போட்டுள்ள ஷெபாஸ் பாதேஷா சித்தார்த் சுக்லா மறைந்ததாக நான் எப்போதுமே நினைக்க மாட்டேன். ஏனெனில் அவர் என்றுமே என்னுடன் தான் கூட இருப்பார் என்றும் உருக்கமாக பதிவிட்டு இருப்பது ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X