உடைந்து போன காதலி.. சல்மான் கானும் அப்செட்.. நாளை சித்தார்த் சுக்லாவின் இறுதி அஞ்சலி

மும்பை: பிக் பாஸ் சீசன் 13ன் டைட்டில் வின்னரான நடிகர் சித்தார்த் சுக்லா திடீரென இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது ஒட்டுமொத்த தேசத்தையும் உருக்குலைத்தது.

Recommended Video

Bigg Boss 13 Title Winner திடீர் மரணம் | Sidharth Shukla

பிக் பாஸ் டைட்டிலை அறிவித்த அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான சல்மான் கான் முதல் சித்தார்த் சுக்லாவை டேட் செய்து வந்த ஷெனாஸ் கில் வரை பலரும் உடைந்து போயுள்ளனர்.

சித்தார்த் சுக்லாவுக்கு ஆர்மி ஆரம்பித்து அவரை கொண்டாடிய ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சோகத்தில் சல்மான் கான்

சோகத்தில் சல்மான் கான்

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக நடத்தி வரும் நடிகர் சல்மான் கான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 13ன் டைட்டில் வின்னர் சித்தார்த் சுக்லா தான் என அறிவித்தார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் நடிகர் சல்மான் கானை பெரிதும் பாதித்துள்ளது. "இவ்வளவு சீக்கிரம் சென்று விட்டாயே.. எப்போதும் நான் உன்னை மிஸ் பண்ணுவேன்.. உனது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்

ராகுல் காந்தி இரங்கல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு இளம் வயதில் நடிகர் சித்தார்த் சுக்லா மரணித்து இருப்பது தேசத்தையே உலுக்கியுள்ளது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

நேரில் அஞ்சலி

நேரில் அஞ்சலி

ஏகப்பட்ட பாலிவுட் நடிகர்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு சென்று சித்தார்த் சுக்லாவின் அம்மா மற்றும் சகோதரிகளுக்கு நேரில் ஆறுதல் கூறி வருகின்றனர். போஸ்ட்மார்ட்டம் இன்னும் முடியாத நிலையில், சித்தார்த் சுக்லாவின் உடல் அவரது இல்லத்திற்கு இன்று இரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதி ஊர்வலம்

இறுதி ஊர்வலம்

மும்பையில் உள்ள நடிகர் சித்தார்த் சுக்லாவின் இல்லத்தில் நாளை தான் இறுதி ஊர்வலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் ரசிகர்கள், பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் சித்தார்த் சுக்லாவின் வீடு மற்றும் உடல் வைத்திருக்கும் கூப்பர் மருத்துவமனையை முற்றுகையிட்டு வருகின்றனர்.

உடைந்து போன காதலி

உடைந்து போன காதலி

பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்ட ஷெனாஸ் கில்லுக்கும் சித்தார்த் சுக்லாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. நிகழ்ச்சிக்கு பிறகு ரூமர் காதலி என்றே பாலிவுட்டில் அழைத்து வந்தனர். இருவரும் டேட்டிங் செய்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சித்தார்த் சுக்லாவின் மரண செய்தி அறிந்ததும் அவர் உடைந்து போய் விட்டார் அவருக்கு உடல் நலம் சரியில்லை என ஷெனாஸ் கில்லின் தந்தை தெரிவித்துள்ளார்.

குஷ்பு இரங்கல்

குஷ்பு இரங்கல்

நீங்க யாருன்னே எனக்கு தெரியாது.. ஆனாலும், உங்கள் இழப்பு என்னை மிகவும் பாதித்துள்ளது. நீங்கள் செய்த சாதனைகள் பற்றி அறிந்ததும் இவ்வளவு சீக்கிரம் ஒரு நல்ல உள்ளம் இந்த மண்ணை விட்டு சென்று விட்டதே.. இந்த வாழ்க்கை ஏன் எப்படி நிரந்தரமற்றதாக உள்ளது என நடிகை குஷ்பு ட்வீட் போட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே இரங்கல்

பூஜா ஹெக்டே இரங்கல்

பீஸ்ட் படத்தில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டேவும் தனது ட்விட்டர் பக்கத்தில், தனிப்பட்ட முறையில் சித்தார்த் சுக்லா யாரென்று எனக்கு தெரியாது. ஆனால், இத்தனை இளம் வயதில் ஒரு சிறந்த நடிகர் இறக்கிறார் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X