Don't Miss!
- News
"ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?" சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு..!
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Technology
Realme GT Neo 3 Naruto Limited Edition அறிமுகம்.. ஆரஞ்சு நிறத்தில் அட்டகாச லுக்.. எப்போ வாங்கலாம்?
- Automobiles
நடுரோட்டில் உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்... இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குதா?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நிழல் உலக தாதாக்களை வைத்து மிரட்டல்… ஷில்பா,அவரது கணவர் மீது ஷெர்லின் சோப்ரா புகார் !
மும்பை : ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் நிழல் உலக தாதாக்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதற்கு ஈடு தொகையாக 75 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அண்ணாச்சியை விடாத இசைவாணி.. நீ ரொம்பவே மாறிட்ட என குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
இந்த கொலை மிரட்டலை கண்டுதான் பயப்படபோவதில்லை என்றும் ஷெர்லின் சோப்ரா கூறியுள்ளார்.

ராஜ்குந்தரா கைது
ஆபாசப் படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றிய புகாரில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவருடன் பணியாற்றியது தனக்கு மோசமான அனுபவம் என்று ராஜ்குந்த்ரா மீது புகார் கூறியிருந்தார்.

மீண்டும் புகார்
ராஜ்குந்த்ரா மீது வழக்கறிஞர் புகார் கொடுக்குமாறு கூறியதால் தான், நான் வழக்கு தொடர்ந்ததாக கூறி, வழக்கை வாபஸ் பெற்றார் ஷெர்லின் சோப்ரா. இதையடுத்து, அக்டோபர் 14 அன்று ஜுஹு போலீஸ் நிலையத்தில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் புகார் அளித்தார்.

ரூ. 50 கோடி நஷ்ட ஈடு
ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி வழக்கறிஞர் பாட்டீல், தம்பதியினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லை என்றும், பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஷெர்லின் சோப்ரா செயல்படுவதாக கூறி,' ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ. 50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

ஷெர்லின் சோப்ரா பதில்
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோர் தனக்கு எதிராக ரூ.50 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கு நடிகையும் மாடலுமான ஷெர்லின் சோப்ரா பதிலளித்துள்ளார்.

கொலை மிரட்டல்
ராஜ் குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் நிழல் உலக தாதாக்களை வைத்து மிரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். எனது புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படியும், எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யுமாறு காவல்துறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.75 கோடி நஷ்ட ஈடு
மேலும் என்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதற்காவும், பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் 75 கோடி ரூபாய் கேட்டு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் என்று ஷெர்லின் சோப்ரா கூறுகிறார். ஷெர்லின் சோப்ரா ஜூஹூ காவல் நிலையத்தில் இந்த புகார் மனுவை அனுப்பியுள்ளார்.