12வது திருமண நாள்.. என்றும் உன்னை தாங்குவேன் .. கணவரை நெகிழ வைத்த பாலிவுட் நடிகை !

மும்பை : பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இன்று தனது 12வது திருமண நாளை கொண்டாடுகிறார். தனது திருமண புகைப்படங்களுடன் கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான "பஸிகர்" என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைப்பட உலகிற்கு அறிமுகம் ஆனார் ஷில்பா ஷெட்டி.

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து முன்னணி நடிகை ஆனார்

அதிக வசூலை அள்ளி

அதிக வசூலை அள்ளி

1994ஆம் ஆண்டு அக்ஷய் குமாருடன் இணைந்து ஷில்பா ஷெட்டி நடித்த "மைன் கில்லாடி து அனாரி" திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் கலக்கி இருந்த ஷில்பா ஷெட்டி பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் அந்த ஆண்டில் வெளியாகி அதிக வசூலை அள்ளிய ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக வசூல் சாதனை புரிந்தது.

தமிழில்

தமிழில்

பாலிவுட்டில் சக்கை போடு போட்டு வந்து நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவா இரு வேடங்களில் கலக்கி இருந்த மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

திருமணம்

திருமணம்

முன்னணி நடிகையாக வலம் வந்த, ஷில்பா ஷெட்டி லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ராயை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவராக ராஜ்குந்த்ரா ஓட்டல்கள், தங்க வர்த்தகம், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் என பல்வேறு துறைகளில் வர்த்தகம் செய்து வருகிறார். இந்த தம்தியனாருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

திருமண நாள் புகைப்படம்

திருமண நாள் புகைப்படம்

இந்நிலையில், ஷில்பா தனது 12வது திருமண நாளை கொண்டாடி வருகிறார். திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், தனது கணவர் ராஜ்குந்தராவுக்கு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

வாழ்த்துக்கள் அன்பே

வாழ்த்துக்கள் அன்பே

இதில், இந்த அழகான தருணம் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது, மிகவும் மகிழ்ச்சியான நேரங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கடினமான நேரங்களைத் தாங்குவது, அன்பின் மீது நம்பிக்கை வைப்பது மற்றும் கடவுள் நமக்கு வழி காட்டுவது போன்ற வாக்குறுதியை அந்த நாளில் எடுத்துக்கொண்டே இதை தற்போது வரை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பே என தனது கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார் ஷில்பா.

கைதானார்

கைதானார்

மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின் பேரில் ராஜ்குந்த்ராவை சில மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் தற்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X