twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா… நடிகை ஷெர்லின் சோப்ரா மீது ரூ .50 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு !

    |

    மும்பை : நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோர் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ.50 கோடி கேட்டு மான நஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருந்தார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

    கடந்த வாரம், மும்பை ஜுஹு போலீசில், அந்த ஜோடி தன்னை பாலியல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், பண மோசடி செய்ததாகவும் குற்றம்சாட்டி புகார் அளித்திருந்தார்.

    மான நஷ்ட வழக்கு

    மான நஷ்ட வழக்கு

    ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் நடிகர் ஷெர்லின் சோப்ரா மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர். தம்பதியினரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பி பாட்டீல் ரூ .50 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், நடிகை ஷெர்லின் சோப்ரா, ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு, எவ்வித ஆதாரமும் இல்லை, பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஷெர்லின் சோப்ரா இந்த வழக்கை தொடுத்திருப்பதாக ராஜ்குந்த்ராவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    மீண்டும் வழக்கு

    மீண்டும் வழக்கு

    ஷெர்லின் சோப்ரா கடந்த ஏப்ரல் மாதம் ராஜ்குந்தரா மீது புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஷெர்லின் சோப்ரா, தானாக முன்வந்து தனது புகார் போலியானது என்றும், அவரது வழக்கறிஞர் தான் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஒரு புகாரைத் தொடங்க பரிந்துரைத்தார் என்றும், ராஜ் குந்த்ரா மீது கிரிமினல் புகார் கொடுத்ததற்காக வெட்கப்படுவதாகவும், நிபந்தனையின்றி புகாரை வாபஸ் பெறுவதாக கூறி வழக்கை வாபஸ் பெற்றதை வழக்கறிஞர் பாட்டீல் அந்த நோட்டீசில் சுட்டிகாட்டியுள்ளார். இதையடுத்து, வழக்கறிஞர் மூலம் மீண்டும் வழக்குப்பதிவு செய்துள்ளது பணம் பறிக்கும் நோக்கத்துடன் தான் என்று வழக்கறிஞர் பாட்டீல் கூறியுள்ளார்.

    ரூ 50 கோடி நஷ்ட ஈடு

    ரூ 50 கோடி நஷ்ட ஈடு

    இந்நிலையில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்தரா ஆகியோர் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு எதிராக ரூ 50 கோடி கேட்டு மான நஷ்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், நற்பெயர் இழப்பு, வியாபார இழப்பு மற்றும் உடல் மற்றும் மன வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதில் கோரியுள்ளனர்.

    பகிரங்க மன்னிப்பு

    பகிரங்க மன்னிப்பு

    செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் பகிரங்க மன்னிப்பை வெளியிட வேண்டும் என்றும், இதை செய்ய தவறினால், சோப்ராவுக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை எடுப்படும் என்றும் வழக்கறிஞர் பாட்டீல் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Shilpa Shetty and Raj Kundra's lawyers have filed a Rs 50 crore defamation case against actress Sherlyn Chopra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X