97 கோடி முடக்கினால் என்ன? பல கோடிக்கு கார் வாங்கி கெத்தா போவேன்.. ஷில்பா ஷெட்டி கணவர் அலப்பறை!
மும்பை: ஆபாச பட வழக்கில் கைதான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா புதிதாக பல கோடி மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளது தான் பாலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் தான் பண மோசடி வழக்கில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டியின் 97 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர்.
பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், விஜய் நடித்த குஷி படத்தில் இடம்பெற்ற மேக்கரினா பாடலில் நடனமாடியிருப்பார்.

ஏகப்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ள ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ரா எனும் தயாரிப்பாளரை திருமணம் செய்த நிலையில், ராஜ் குந்த்ரா பல இளம் பெண்களை நிர்வாணமாக நடிக்க வைத்து ஷார்ட் வீடியோக்களை எடுத்து வெளிநாட்டினருக்கு விற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஷில்பா ஷெட்டி கணவர்: ராஜ் குந்த்ராவை விவாகரத்து செய்து பிரிந்து விடுவார் ஷில்பா ஷெட்டி என்றெல்லாம் பாலிவுட்டில் தகவல்கள் பரவின. ஆனால், கடைசி வரை எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் கணவருக்கு துணையாகவே இருப்பேன் என்பதில் ஷில்பா ஷெட்டி ரொம்பவே உறுதியாக உள்ளார். தொடர்ந்து கணவருடன் வெளியே செல்வது உள்ளிட்ட செயல்களிலும் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
97 கோடி சொத்துக்கள் முடக்கம்: பண மோசடியில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்னதாக சுமார் 97 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி இருந்தனர். மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், நீதித் துறையின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறோம். சட்டப்படி சொத்துக்களை மீட்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எங்கள் வழக்கறிஞர்கள் எடுப்பார்கள் என கூறியிருந்தனர்.
3 கோடிக்கு சொகுசு கார்: இந்நிலையில், நேற்று புதிதாக ராஜ் குந்த்ரா பச்சை நிறத்திலான சொகுசு கார் ஒன்றை சுமார் 3 கோடிக்கு வாங்கியுள்ளார். மும்பை ஜூஹுவில் உள்ள வீட்டில் இருந்து ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி அந்த காரில் ஏறி வரும் காட்சிகள் வெளியாகி பாலிவுட்டையே பரபரப்பாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











