Just In
- 17 min ago
இப்போதான் ஹேப்பி.. சொந்த உழைப்பில் 4 பெட்ரூம் வீடு.. பல வருட கனவை நனவாக்கிய பிரபல நடிகை!
- 33 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 1 hr ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
Don't Miss!
- Finance
டாடாவுக்கு அரசு நிறுவனம் கொடுத்த சூப்பரான சான்ஸ்.. அதுவும் ரூ1,200 கோடியில்..!
- News
காந்தியைவிட பிரபலமானவர் போஸ்.. அவரை கொன்றது காங்கிரஸ்தான்... பாஜக எம்பி சர்ச்சைப் பேச்சு
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாக்கோ ஓட்ஸ் குக்கீஸ் .. விதவிதமாக ரெசிபி செய்து அசத்தும்.. ஷில்பா ஷெட்டி !
மும்பை : வீட்டில் இருக்கும் ஷில்பா ஷெட்டி சாக்கோ ஓட்ஸ் குக்கீஸ்களை செய்து அசத்தி உள்ளார்.
கொரோனா பாதிப்பு வந்தாலும் வந்தது வீட்டில் இருக்கும் ஹீரோயின்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஊரடங்கு ஒரு முடிவுக்கு வரும் என்று நினைத்த சினிமா பிரபலங்களுக்கு மட்டும் இல்லை சாமானிய மக்களுக்கும் ஊரடங்கு நீட்டிப்பு செய்தி பெரும் அதிர்ச்சி தந்த செய்தி என்றே சொல்லலாம்.

ஊரடங்கில் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் எப்போதும் சமூகவலைத்தளங்களில் பிஸியாகவே இருக்கின்றனர். அன்றாடம் வித விதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட்ஸ் நடத்துவது, யோகா, உடற்பயிற்சி என்ற பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
ஷூட்டிங் இருக்கும் சமயத்தில் ஓய்வின்றி பல நாடுகளுக்கு பறந்துகொண்டிருக்கும் இவர்களுக்கு குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான விஷயம், அதனால் வருடத்திற்கு ஒரு முறை தன் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.
இந்த ஊரடங்கு அவர்கள் குடும்பத்துடன் செலவிடும் ஓய்வு நாட்களாகவே அவர்கள் கருதுகின்றனர். நடிப்பை தவிர அவர்களிடம் இருக்கும் பல வேறு திறமைகளை வெளிக்காட்டுவதற்கு இந்த ஊரடங்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்..
இந்துக்கடவுள்களை அவமதிக்கிறார்.. விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சென்னை கமிஷனரிடம் புகார்!
பல பிரபலங்களும் வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, தன் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவது, அவர்களது துணிகளை அவர்களே அயனிங் செய்வது போன்ற பல வேலைகளை செய்து வருகின்றனர்.
அதிலும் சிலர் ஒரு படி மேலே சென்று விட்டனர். தனக்கு பிடித்த உணவுகளை தானே சமைத்து அனைவருக்கும் தருகின்றனர். சாப்பிடுபவர்கள் பாடு திண்டாட்டம் தான் என்றாலும், பலர் நன்றாகவே சமைக்கின்றனர். அவர்கள் செய்யும் ரெசிபிகள் வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு அருமையாகவும் இருக்கிறது.

அந்த வகையில் நடிகை ஷில்பா ஷெட்டி அவருக்கு பிடித்தமான சாக்லேட் சிப்ஸ் ஓட்ஸ் க்ரிஸ்பி குக்கீஸ்களை செய்திருக்கிறார். இதை பார்ப்பதற்கே எச்சில் ஊறுகிறது. பிஸ்கட்டை விட அதனை செய்யும் முறை பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. மாவை கலக்கும் இயந்திரத்தை பார்க்கும் போதே அழகாக இருக்கிறது.
குக்கீஸ்களை பேக் செய்து, பின்பு அவர் பிஸ்கட்டுடன் போஸ் கொடுக்கும் விதம் அழகு தான். நடிகர் விஜயுடன் "மகோரினா "பாடலுக்கு ஆடிய ஷில்பா இன்றும் அப்படியே இருக்கிறார்.

இது போன்ற பல பல உணவு பண்டங்களை செய்து கொண்டு இருக்கிறார் ஷில்பா. சமீபத்தில் தன் வீட்டு தோட்டத்தில் இருந்து கத்தரிக்காய் பறித்து தானே கத்தரிக்காய் கிரேவி செய்தும் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமைப்பது மட்டும் அல்லாமல் யோகா செய்வதிலும், பல வகையான டிக்டாக் செய்வதிலும் கை தேர்ந்தவர் நமது ஷில்பா. அன்றாடம் அவர் செய்யும் யோகாவை வீடியோவாக பதிவிட்டு இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டு இருக்கிறார்.

இதை பார்க்கும் ரசிகர்களுக்கு புது புத்துணர்ச்சி கிடைக்கிறது என்பது தான் உண்மை. இவர் பதிவிடும் அனைத்து வீடியோக்களுக்கும் சூப்பர் கமெண்ட்ஸ்களை அள்ளித்தெளிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
அவர் செய்யும் டிக் டாக் அவருக்கு மட்டுமே அழகாக இருக்கும் என்பது அவரது ரசிகர்களின் கருத்து. இது போன்று பல சுட்டித்தனமான செயல்களை அன்றாடம் வீட்டில் செய்து, வீட்டை ரணகளமாக மாற்றி கொண்டு இருக்கிறார் நமது ஷில்பா ஷெட்டி. விரைவில் புதிய ரெசிபியை அறிமுகம் செய்வார் என்றும் நாம் நம்பலாம். அதுவே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாகவும் இருக்கின்றது.