தீபிகாவுடன் முத்தக்காட்சியில் நடிக்க பயந்தேன்… சித்தாந்த் சதுர்வேதி பேட்டி !

மும்பை : பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதி, தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள திரைப்படம் கெஹ்ரையான்.

இத்திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. அதில் அனன்யா பாண்டே, சித்தாந்த் சதுர்வேதி மற்றும் தைரிய கர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியான போதே அதில் இடம் பெற்ற முத்தக்காட்சிகள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.இதில், சதுர்வேதி மற்றும் தீபிகா படுகோனுக்கு இடையே கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினார்கள்

கெஹ்ரையான்

கெஹ்ரையான்

கெஹ்ரையான் திரைப்படம் ஒரு முக்கோண காதல் கதை கொண்ட திரைப்படமாகும். இதில், தீபிகா படுகோனே ஒரு ஃபிட்னெஸ் பயிற்சியாளராக உள்ளார் அவரது கணவர் கரன். இந்நிலையில், தீபிகாவின் தங்கை டியாவுக்கு ஜெயினுடன் அதாவது சித்தாந்த்துடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த நேரத்தில் ஜெயினுடன் தீபிகாவுக்கு காதல் மலர்ந்து, உறவுச்சிக்கலாகிறது இது தான் கெஹ்ரையான் திரைப்படத்தின் ஒன் லைன் கதை.

கதை பிடித்துவிட்டது

கதை பிடித்துவிட்டது

இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடித்தது குறித்து சித்தாந்த் சதுர்வேதி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஷகுன் என்னிடம் கதை சொன்னார் கதை கேட்டதும் பிடித்துவிட்டதால் அவருடன் பணியாற்ற ஆவலுடன் இருந்தேன். அதுவும் படத்தில் தீபிகா இருக்கிறார் அவரை காதல் செய்யும் காதலன் என்பதால் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். படத்தில் அதிக கவனத்தை ஈர்ப்பது தீபிகா தான்.

பதற்றமாக இருந்தேன்

பதற்றமாக இருந்தேன்

ஷகுன் படத்தில் முத்தக்காட்சி இருக்கும் என்று சொன்னார். ஆனால், எந்த அளவுக்கு என்பது ஸ்கிரிப்ட்டில் இல்லை. மேலும், அவருடன் இருக்கும் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது நான் பதற்றமாகவே இருந்தேன். மேலும், பல முறை இயக்குநரிடம் இவ்வளவு நெருக்கம் படத்துக்கு வேணுமான்னு கேட்டேன். அந்தரங்கமான காட்சியில் நடிக்கும் போது கொஞ்சம் பயமா இருந்துச்சு என்று சித்தார் கூறினார்.

துணிச்சலுடன்

துணிச்சலுடன்

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்தார்கள். ஒரு சிக்கலான உறவை இயக்குநநர் அழகாக படமாக்கி உள்ளார். மேலும், அந்தரங்க காட்சி, முத்தக்காட்சி என படத்தை துணிச்சலுடன் படமாக்கி உள்ளார் இயக்குநர் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X