Sikandar Box Office Prediction: சல்மான் கான் தப்பு பண்ணிட்டாரே.. சிக்கந்தர் முதல் நாள் வசூல் கணிப்பு!
மும்பை: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் நடித்த எம்புரான் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி 2 நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ஆனால், சல்மான் கான் பான் இந்தியா படமாக சிக்கந்தர் படத்தை கொடுக்காமல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் ஹீரோயின்கள், சத்யராஜ் வில்லன் என பான் இந்தியாவுக்கு பக்காவான அனைத்து அம்சங்களும் இருந்த நிலையிலும், வெறும் இந்தியில் மட்டுமே சிக்கந்தர் படத்தை எடுத்து வெளியிடுவேன் என சல்மான் கான் அடம்பிடித்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள சிக்கந்தர் படம் பாலிவுட் ரசிகர்களை திருப்திப்படுத்தினாலே போதும் என சல்மான் கான் நினைத்தது தான் இதற்கு முக்கிய காரணமா? என்றும் பாலிவுட்டில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சல்மான் கானுக்கு தென்னிந்தியாவில் மார்க்கெட் இல்லாத நிலையில் தான் அவர் பான் இந்தியா ரிலீஸ் பற்றி கவலைப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
500 கோடியை பார்க்காத சல்மான் கான்: பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான் எல்லாம் 1000 கோடி வசூல் படங்களை அசால்ட்டாக கொடுத்துள்ள நிலையில், இதுவரை சல்மான் கான் ஒரு 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தைக் கூட கொடுக்கவில்லை என்பது அவருடைய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் எல்லாம் 500 கோடி பாக்ஸ் ஆபீஸ் படங்களை கொடுத்துள்ள நிலையில், இந்த முறை சல்மான் கான் அந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்கிற பிரஷர் எழுந்துள்ளது.
இந்தியில் மட்டுமே: ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய ஆள் சல்மான் கான் கிடையாது. தனக்கு எது சரியென படுகிறதோ அதை செய்பவர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் என தென்னிந்தியாவில் பிரபலமானவர்களை வைத்துக் கொண்டு உருவாகியிருக்கும் சிக்கந்தர் திரைப்படத்தை பான் இந்தியா படமாக பல மொழிகளில் ரிலீஸ் செய்யாமல், இந்தி மொழியில் மட்டுமே இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்கிறார் சல்மான் கான்.
சிக்கந்தர் முதல் நாள் வசூல் கணிப்பு: டைகர் 3 படம் கடைசியாக சல்மான் கான் நடிப்பில் வெளியாகி முதல் நாளில் அதிகபட்சமாக 43 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் ரம்ஜான் பண்டிகை விடுமுறை திங்கட்கிழமை என 2 நாட்களை மட்டுமே டார்கெட் செய்து வெள்ளிக்கிழமை கூட படத்தை வெளியிடாமல் சல்மான் கான் நாளை சிக்கந்தர் படத்தை வெளியிட உள்ளார். இந்த படம் முதல் நாளில் அதிகபட்சமாக 13 முதல் 20 கோடி வரை தான் இந்தியளவில் வசூல் செய்யும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 50 கோடி வசூலை சிக்கந்தர் கடக்குமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தால் மட்டுமே மெகா பிளாக்பஸ்டர் ஆகும் என்கின்றனர்.
Disclamier: இந்த வசூல் கணிப்பு, பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் கணிக்கப்பட்ட தகவல் மட்டுமே.


Click it and Unblock the Notifications











