Sikandar BO: புல்லட் ப்ரூஃப் அறையில் இருந்து சல்மான் கான் ரம்ஜான் வாழ்த்து.. சிக்கந்தர் 2 நாள் வசூல்!
மும்பை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் தனது சிக்கந்தர் படத்தை ரிலீஸ் செய்தார். வெள்ளிக்கிழமையை தாண்டி புதிய பெரிய படங்கள் எல்லாம் வசூலை அள்ளுவதற்காக வியாழக்கிழமையே வெளியாகி வரும் சூழலில் ஞாயிற்றுக்கிழமை தனது படத்தை வெளியிட்டார் சல்மான் கான்.
விடுமுறை தினம் என்பதால் மிகப்பெரிய ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஒட்டுமொத்தமக 5500 காட்சிகளில் படம் வெளியானாலும், முதல் ஷோ விமர்சனத்தை பார்த்துவிட்டு பலரும் சல்மான் கான் படத்தை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டத்தில் பார்க்க வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டனர்.

தனது வீட்டில் பாலிவுட் பிரபலங்களுக்கு மிகப்பெரிய ரம்ஜான் விருந்து வைத்த சல்மான் கான் கண்ணாடி அறையில் இருந்து ரசிகர்களையும் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. சிக்கந்தர் திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு எந்தளவுக்கு வசூல் செய்தது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
சல்மான் கானுக்கு ரெஸ்ட் தேவை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபேன் படம் தோல்வியை தழுவிய பிறகு தொடர்ந்து அடிவாங்குகிறோமே என நினைத்த ஷாருக்கான் 2 ஆண்டுகள் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு நல்ல கதைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினார். அவருடைய கம்பேக் பதான், ஜவான், டன்கி என ஒரே வருடத்தில் 2500 கோடி வசூலை வாரி குவித்து ஹாட்ரிக் அடிக்க வைத்தது. அடுத்த அடுத்த தோல்விகளால் அப்செட்டான அமீர்கானும் ஓய்வில் இருந்துவிட்டு தற்போது ரஜினிகாந்தின் கூலி படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். சல்மான் கான் தொடர்ந்து ஃபிளாப் படங்களை கொடுத்து வரும் நிலையில், அவரும் ஒரு சின்ன பிரேக் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
புல்லட் ப்ரூஃப் கண்ணாடி ரூம்: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் நடிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை சல்மான் கான் தனது வீட்டில் வழங்கினார். அதே போல தனது ரசிகர்களையும் சந்திக்க நினைத்த அவர், பாதுகாப்பு காரணமாக புல்லட் ப்ரூஃப் கொண்ட கண்ணாடி ரூமில் இருந்து ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கையசைத்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அவருக்கு தொடர்ந்து உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சிக்கந்தர் 2 நாள் வசூல்: டோலிவுட் படங்களே முதல் நாளில் இந்தி பெல்ட்டிலேயே 50 கோடி வசூல் சாதனையை படைத்து வரும்ந் இலையில், சல்மான் கானின் சிக்கந்தர் படம் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான தியேட்டர்களில் வெளியான நிலையிலும், 26 கோடி ரூபாய் வசூலை தான் இந்தியளவில் அள்ளியதாக சாக்னிக் இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரம்ஜான் பண்டிகை தினமான நேற்று இந்தியளவில் 29 கோடி ரூபாய் வசூலை சிக்கந்தர் படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை இந்தியளவில் சிக்கந்தர் திரைப்படம் 55 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. அதிகாரப்பூர்வமாக படக்குழு முதல் நாளில் உலகளவில் சிக்கந்தர் திரைப்படம் 54.72 கோடி வசூல் செய்ததாக அறிவித்துள்ளது. சஜீத் நதியத்வாலா தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்களே குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











