என்னை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்..பிரபல பாடகர் மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு!

மும்பை : பிரபல பாடகர் தன்னை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இளம் பெண் அளித்துள்ள புகாரால் பாலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராகுல் ஜெயின் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார், பாலிவுட் மற்றும் இந்திய தொலைக்காட்சித் துறையில் அவரது படைப்புகளுக்கு பெயர் பெற்றவர்.

2016 ஆம் ஆண்டு வெளியான ஃபீவர் ஹிந்தித் திரைப்படங்களில் "தெரி யாத்" பாடலின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் ராகுல் ஜெயின் 250க்கும் மேற்பட்ட ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

பாடகர் ராகுல் ஜெயின்

பாடகர் ராகுல் ஜெயின்

இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் 30 வயது இள ம் பெண் பாடகர் ராகுல் ஜெயின் மீது ஓசிவரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், பாடகர் ராகுல் ஜெயின் தனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார் என்றும், எனது ஆடை வடிவமைப்பு பணிகளை புகழ்ந்து பாராட்டி பேசினார். இதனால் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம்.

வீட்டிற்கு அழைத்தார்

வீட்டிற்கு அழைத்தார்

ஒருகட்டத்தில் தனக்கான தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக என்னை நியமிக்க இருப்பதாகவும் ராகுல் ஜெயின் என்னிடம் கூறியிருந்தார். மேலும், இதுகுறித்து பேசுவதற்காக அந்தேரியின் புறநகர் பகுதியில் உள்ள ஃப்ளாட்டிற்கு என்னை அழைத்தார். நானும் ஆகஸ்ட் 11 அன்று ஜெயின் வீட்டிற்குச் சென்றேன்.

பலாத்காரம் செய்தார்

பலாத்காரம் செய்தார்

இதையடுத்து, வீட்டில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, அவர் தனது உடைகளை பார்க்குமாறு கூறி, அவரது படுக்கை அறைக்கு என்னை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தடுக்க முற்பட்ட போது ராகுல் ஜெயின் தன்னை தாக்கியதாகவும் அந்த ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பல பிரிவுகளில் வழக்கு

பல பிரிவுகளில் வழக்கு

இளம் பெண் அளித்த புகாரின் பேரில் ராகுல் ஜெயின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 376, 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக ஓசிவரா காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொய்யான புகார்

பொய்யான புகார்

இந்த புகார் குறித்து பதிலளித்துள்ள ஜெயின், இந்தப் பெண்ணை எனக்குத் தெரியாது என்றும், அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளார். இதற்கு முன்பும் ஒரு பெண் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்தாலும் எனக்கு நீதி கிடைத்தது. இந்தப் பெண் அந்தப் பெண்ணின் கூட்டாளியாக இருக்கலாம என்று ராகுல் ஜெயின் விளக்கம் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X