Sitaare Zameen Par Box Office: ஞாயிற்றுக்கிழமை அமீர்கானுக்கு அடித்த ஜாக்பாட்.. சித்தாரே ஜமீன் பர் வசூல்!

மும்பை: லால் சத்தா சிங் படத்தின் தோல்விக்குப் பிறகு சில ஆண்டுகள் ஓய்வெடுத்த அமீர்கான் மீண்டும் நடிக்க ஆரம்பித்த நிலையில், அவரது சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழில் கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கிய ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான் நடித்துள்ள ஃபீல் குட் படமான சித்தாரே ஜமீன் பர் படத்தை சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பாராட்டியுள்ளனர்.

லால் சிங் சத்தா திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே 60 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டிய நிலையில், 3 நாட்களில் அந்த வசூல் சாதனையை அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் முறியடித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Sitaare Zameen Par Box Office Aamir Khan gets a massive collection on Sunday
Photo Credit:

அமீர்கான், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள சித்தாரே ஜமீன் பர் இதுவரை 60 கோடி ரூபாய் வரை இந்தியளவில் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது அமீர்கானின் கம்பேக்கிற்கு மிகவும் குறைவான வசூல் என்றே கூறுகின்றனர்.

2500 கோடி அடித்த ஷாருக்கான்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கும் ஃபேன் படம் தோல்வியான பிறகு சின்ன பிரேக் தேவைப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அவர் கடந்த 2023ம் ஆண்டு கம்பேக் கொடுத்த நிலையில், பதான், ஜவான் மற்றும் டன்கி என தொடர்ந்து 3 ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து பாக்ஸ் அபீஸில் சுமார் 2500 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தி கிங் கான் என்பதை நிரூபித்தார். ஆனால், அமீர்கானின் கம்பேக் இன்னமும் பெரிய வசூலை அவருக்கு வாரிக் கொடுக்கவில்லை.

சுமாரான ஓபனிங்: தனுஷின் குபேரா மற்றும் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் உள்ளிட்ட படங்கள் இந்தியளவில் கடந்த வெள்ளிக்கிழமை போட்டியாக வெளியாகின. இதில், நல்ல ஓபனிங் வசூலை குபேரா படம் தான் அள்ளியது. அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெறும் 10.7 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது பாலிவுட்டையே பதற செய்தது. ஆனால், சனிக்கிழமையே படம் பிக்கப் ஆகிவிட்டது.

சண்டே செம வசூல்: சனிக்கிழமை 20 கோடி ரூபாயாக படத்தின் வசூல் அதிகரிக்க, ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் இந்தியளவில் 29 கோடி ரூபாய் என இதுவரை ஒட்டுமொத்தமாக 60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக sacknilk இணையதளம் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. உலகளவில் 70 முதல் 80 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்றும் கூடிய விரைவில், 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூலை சித்தாரே ஜமீன் பர் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் அமீர்கான் பக்காவான கேமியோ ரோலில் வர காத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி அந்த படம் வெளியாகிறது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் அமீர்கான் நடிக்கவுள்ள நிலையில், கூடிய சீக்கிரத்திலேயே பாக்ஸ் ஆபீஸிலும் அமீர்கான் தனது கம்பேக்கை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்தாரே ஜமீன் பர் படத்தை பார்த்த பலருமே படத்தை கொண்டாடி வருவது அமீர்கானை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X