Sonakshi Sinha: 7 வருட ரகசிய காதல்.. அப்பா சம்மதத்துடன் இஸ்லாமிய நடிகரை மணந்த சோனாக்‌ஷி சின்ஹா!

மும்பை: பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிகர் ஜாகிர் இக்பாலை இன்று திருமணம் செய்துக் கொண்டார். சிறப்பு திருமண சட்டப்படி இவர்களது திருமணம் மும்பையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையை அணிந்துக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சட்டப்பூர்வமாக ரெஜிஸ்டரில் கையொப்பம் இட்டு தங்கள் திருமனத்தை நடத்தினர்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா சுமார் 7 ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் ஜாகிர் இக்பாலை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருடன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்துக்கு பெற்றோர்கள் கடைசி வரை சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடைசியில் திருமணத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

sonakshi sinha shatrughan sinha marriage bollywood


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பரும் பிரபல பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் மகளான சோனாக்‌ஷி சின்ஹா சல்மான் கான் நடித்த தபாங் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். சமீபத்தில், அப்பா அம்மாவை விட்டு விட்டு தனியாக மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி குடியேறினார்.

லிங்கா ஹீரோயின்: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த லிங்கா திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியானது. அந்த படத்தில் பிளாஷ்பேக் போர்ஷனில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் தான் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா இந்த ஆண்டு ஹீரமண்டி வெப்சீரிஸ் மற்றும் படே மியான் சோட்டே மியான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.

சத்ருகன் சின்ஹாவின் மகள்: ரஜினிகாந்தின் நண்பரான சத்ருகன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்‌ஷி சின்ஹா. வாரிசு நடிகையாக பாலிவுட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தபாங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சிம்பு ஒஸ்தி என டைட்டில் வைத்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளின் திருமணத்துக்கு தன்னை அழைக்கவில்லை என சத்ருகன் சின்ஹா சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது காட்டமாக பேசியிருந்த நிலையில், இன்று நடைபெற்ற மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

இஸ்லாமியரை மணந்தார்: நோட்புக் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இக்பாலை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் சோனாக்‌ஷி சின்ஹா லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் வாழ்ந்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மும்பையில் தனியாக சீ ஃபேஸிங் அப்பார்ட்மெண்ட் எடுத்து காதலருடன் தங்கி வந்தார். இந்நிலையில், இன்று குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் செய்துக் கொண்டார். இந்த திருமணத்துக்காக சோனாக்‌ஷி மதம் மாறிவிட்டார் என வதந்திகள் கிளம்பிய நிலையில், அவர் மதம் மாறவில்லை என்பதை அறிவித்துள்ளனர். அதன் காரணமாகவே சிறப்பு திருமண சட்டத்தின் மூலம் தங்கள் பதிவு திருமணத்தை நடத்தியுள்ளனர்.

sonakshi sinha shatrughan sinha marriage bollywood

விரைவில் ரிசப்ஷன்: கடந்த சில நாட்களாகவே சோனாக்‌ஷியின் மும்பை பங்களாவில் திருமணத்திற்கு முந்தைய மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் களைகட்டின. இந்நிலையில், மும்பையில் உள்ள பாஸ்டியனில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் அதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X