சூப்பர் ஸ்டார் மகனை என்சிபி சூப்பர் டூப்பர் ஸ்டராக்குகிறது.. ஆர்யன் கான் குறித்து சர்ச்சை இயக்குநர்!

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாருக்கானின் மகனை என்சிபி சூப்பர் டூப்பர் ஸ்டாராக்குகிறது என கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. பிரதமர் மோடி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் விமர்சித்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் ராம்கோபால் வர்மா.

போதாகுறைக்கு சமீப காலமாக அவர் இயக்கும் படங்களும் ஆபாசமாக உள்ளதால் ஆபாச பட இயக்குநர் என்றும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து

விவாகரத்து குறித்து சர்ச்சை கருத்து

மேலும் ஆமிர்கான் விவாகரத்து மற்றும் நாக சைதன்யா - சமந்தா விவாகரத்து குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் டிவிட்டியிருந்தார். அவரது பதிவுகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் குறித்து டிவிட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா.

கப்பலில் போதை பார்ட்டி

கப்பலில் போதை பார்ட்டி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா புறப்பட்ட எம்ப்ரஸ் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பார்ட்டியில் பங்கேற்றதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டு வந்தனர்.

ஜாமீன் நிராகரிப்பு

ஜாமீன் நிராகரிப்பு

இதையடுத்து நான்கு நாட்கள் தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்று முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதால் சிறையில் இருந்து வெளியில் வர முடியாமல் உள்ளார்.

Recommended Video

Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan
விற்பனை செய்துள்ளார்

விற்பனை செய்துள்ளார்

இந்த நிலையில் ஆர்யன் கான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியது, விற்பனை செய்த வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என தேசிய பொதைப்பொருள் தடுப்புப்பிரிவு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இன்றைக்கு ஒத்தி வைப்பு

இன்றைக்கு ஒத்தி வைப்பு

ஆர்யன் கான் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், கப்பலில் சோதனை நடத்தியபோது ஆர்யன் கான் சம்பவ இடத்தில் இல்லை, போதைப்பொருள் வாங்குவதற்கான பணம் அவரிடம் இல்லை. அவரிடம் போதைப்பொருள் இல்லை என வாதம் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க அரசுத்தரப்பு நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சர்ச்சை பதிவு

சர்ச்சை பதிவு

போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சை இயக்குநர் என அழைக்கப்படும் ராம் கோபால் வர்மா ஆர்யன் கான் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளார்.

சூப்பர் டூப்பர் ஸ்டார் ஆகிறார்

சூப்பர் டூப்பர் ஸ்டார் ஆகிறார்

அவர் பதிவிட்டிருப்பதாவது, ஷாருக்கானின் உண்மையான மற்றும் அறிவார்ந்த ரசிகர்களே, சூப்பர் ஸ்டாரின் மகனை சூப்பர் டூப்பர் ஸ்டாராக்கும் என்சிப்பிக்கு நீங்கள் நன்றி கூற வேண்டும். ஷாருக்கானின் உண்மையான ரசிகனாக நான் ஜெய் என்சிபி என கத்த விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X