“ஆர்ஆர்ஆர்“ படத்திற்கு ஆலியா பட் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

சென்னை : பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படம் ஆர்ஆர்ஆர்.

Recommended Video

கொஞ்சும் தமிழில் பேசிய Alia Bhatt & Jr.NTR | Alia Bhatt Speech in RRR promotion

இத்திரைப்படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர்ஆர்ஆ திரைப்படம் குறித்த பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நேரத்தில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஆர் ஆர்.ஆர்

ஆர் ஆர்.ஆர்

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர்.ஆர் திரைப்படத்திற்கு தமிழில், ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் வெளியாக உள்ளது.

வரலாற்று திரைப்படம்

வரலாற்று திரைப்படம்

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர்

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் வெளியீடு

ஏப்ரல் வெளியீடு

இத்திரைப்படம் ஜனவரி 7ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு படத்தை விளம்பரப்படுத்தும் பணி தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வாய்பிளந்த ரசிகர்கள்

வாய்பிளந்த ரசிகர்கள்

இத்திரைப்படம் குறித்து, பல சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நேரத்தில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆலியா பட் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் இணையத்தில் கசிந்து அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

இத்தனை கோடி சம்பளமா

இத்தனை கோடி சம்பளமா

ஆர்ஆர்ஆர் திரைப்படம் பான் இந்திய திரைப்படம் என்பதால் இந்தி ரசிகர்களை கவர இத்திரைப்படத்தில் ஆலியா பட் மற்றும் அஜய்தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இப்படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார்கள். ஆலியா பட் சம்பந்தப்பட்ட காட்சி வெறும் 20 நிமிடத்துக்கும் குறைவாகவே வரும். இந்த காட்சியில் நடிக்க 9 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றுள்ளார் ஆலியா பட். அதைவிட குறைவான நேரமே வரும் அஜய் தேவ்கான் 35 கோடியை சம்பளமாக பெற்றதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X