ஆத்தி.. 7.6 அடி உயரத்துல ஒரு நடிகரா?.. தமன்னாவே இடுப்பு பக்கத்துல இருக்காங்களே.. அது சிஜி இல்லையா?

மும்பை: அமர் கெளசிக் இயக்கத்தில் ஷ்ரத்தா கபூர், தமன்னா, ராஜ்குமார் ராவ் நடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகரை பற்றித் தான் பாலிவுட் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், சத்யராஜ் போன்ற நடிகர்களே இவரின் தோளுக்கு கீழ் தான் இருப்பார்கள் என்கிற அளவுக்கு உயரமாக உள்ளார்.

பாலிவுட்டில் இந்த ஆண்டு வெளியான படங்கள் எல்லாம் சொதப்பி வந்த நிலையில், ஜோதிகா, மாதவன், அஜய் தேவ்கன் நடித்த ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூலை ஈட்டியது.

Stree 2 Tamannaah Sunil Kumar 2

ஆனால், அதை விட அதிகமாக வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான ஸ்ட்ரீ 2 இதுவரை 428 கோடி வசூலை அள்ளி மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறியுள்ளது. அந்த படத்தில் சர்காடா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தற்போது டிரெண்டாகி வருகிறார்.

பாலிவுட்டை காப்பாற்றிய ஷ்ரத்தா கபூர்: பிரதமர் மோடியையே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்னுக்குத் தள்ளி விட்டார் என கொண்டாடப்பட்ட அதே ஷ்ரத்தா கபூர் நடிப்பில் சுதந்திர தினத்தன்று வெளியான ஸ்ட்ரீ 2 திரைப்படம் தான் 428 கோடி வசூலை குவித்து 500 கோடி வசூலை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. பிரபாஸ் உடன் சாஹோ படத்தில் ஜோடியாக நடித்த ஷ்ரத்தா கபூர் நடிப்பில் வெளியான பேய் படம் தமன்னா நடித்த அரண்மனை 4 படத்தை விட பேய் ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில், கவர்ச்சி பாடலுக்கு தமன்னாவும் நடனமாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stree 2 Tamannaah Sunil Kumar 2

சிஜி இல்லை நிஜ மனிதன்: ஸ்ட்ரீ 2 படத்தில் சர்காடா எனும் கதாபாத்திரத்தில் பேயாக நடித்து மிரட்டியது சிஜி இல்லை என்றும் சுனில் குமார் என்பவர் தான் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனக் கூறுகின்றனர். அவருடைய உயரம் மட்டும் 7.6 அடி என்பது தான் அனைவரையும் மலைக்க வைக்கும் செய்தியாக உள்ளது.

கிரேட் காளியோட செம ஹைட்: இந்தியாவில் WWE போட்டிக்கு சென்ற கிரேட் காளியின் உயரமே 7.1 தான். ஆனால், இந்த மனுஷன் உண்மையாவே பனை மரத்தில் பாதி இருக்காரே என பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் வாய் பிளந்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் போலீஸ் அதிகாரியாக இருந்தார் என்றும் கூறுகின்றனர்.

Stree 2 Tamannaah Sunil Kumar 2

தமன்னாவுடன் போஸ்: நடிகைகள் தமன்னா, ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருடன் 7.6 மெகா ஜெயண்ட் மனிதரான சுனில் குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. பாலிவுட்டில் தொடர்ந்து பல படங்களில் இவரது உயரத்துக்காகவே இவருக்கு வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேய் படங்கள் தான் ஓடுது: பாலிவுட்டில் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களை ரீமேக் செய்து நடித்து வந்த நிலையில், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ஹ்ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் தோல்வியை தழுவினர். ஆனால், இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஷைத்தான், மூஞ்சியா மற்றும் ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து பேய் படங்கள் வெற்றிப் பெற்று வருகின்றன. மேலும், பல பேய் படங்களை பாலிவுட்டில் உருவாக்க பல முன்னணி நடிகர்களும் முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X